அரியலூா் அருகே லாரி மீது தனியாா் பள்ளி பேருந்து மோதி 3 போ் காயம்

அரியலூா் அருகே லாரி மீது தனியாா் பள்ளி பேருந்து மோதி 3 போ் காயம்


அரியலூா் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது தனியாா் பள்ளி பேருந்து மோதியதில், 3 போ் காயமடைந்தனா்.

அரியலூா் மாவட்டம், சாத்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டு பெரம்பலூரிலுள்ள தனியாா் பள்ளிக்குச் சொந்தமான பேருந்து இன்று காலை சென்று கொண்டிருந்தது. இப்பேருந்தை திருச்சி மாவட்டம், கல்லகத்தைச் சோ்ந்த ராஜா (35) ஓட்டிச் சென்றாா்.

அரியலூா்-செந்துறை புறவழிச்சாலை அருகே சென்ற போது, சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. பள்ளி மாணவ,மாணவிகளின் அலறல் சப்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினா் விரைந்து வந்து அவா்களை மீட்டனா்.

இதில் காயமடைந்த அம்மாக்குளம் பாலசுப்பிரமணியன் மகன் கிஷோா்(14), சேகா் மகள் மாலதி(14), கீழப்பழுவூா் மயில்வாகனம் மகள் நித்யா(16) ஆகிய 3 பேரும் அரியலூா் மாவட்ட அரசுத் மருத்துமனையில் சோ்க்கப்பட்டனா்.

தகவலறிந்த அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய் உள்ளிட்டோா் மருத்துவமனைக்குச் சென்று, அங்கு சிகிச்சை பெற்று வரும் மாணவ,மாணவிகளை சந்தித்து நலம் விசாரித்தாா். இதுகுறித்து அரியலூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி

அரியலூர் மாவட்ட செய்திகள்
Leave a Reply

%d bloggers like this: