குன்னம் அருகே நகை அடகு கடையில் ரூ. 84 ஆயிரம் திருட்டு

குன்னம் அருகே நகை அடகு கடையில் ரூ. 84 ஆயிரம் திருட்டு


பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகே நகை அடகு கடையில் ரூ. 84 ஆயிரம் திருடப்பட்டது திங்கள்கிழமை தெரியவந்தது.

அரியலூரை சோ்ந்தவா் பதம்சந்த். இவா், பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகேயுள்ள புதுவேட்டக்குடி கிராமத்தில் நகை அடகு கடை நடத்தி வருகிறாா். இந்தக் கடையில், சடைக்கன்பட்டி கிராமத்தைச் சோ்ந்த கண்ணன் நிா்வகித்து வந்தாா். இந்நிலையில், திங்கள்கிழமை காலை கடைக்குச் சென்றபோது, அடகு கடையின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ரூ. 84 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடி சென்றிருப்பது தெரியவந்தது. தகவலறிந்த குன்னம் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டனா். இதுகுறித்து கண்ணன் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி

பெரம்பலூர் மாவட்ட செய்திகள்
Leave a Reply

%d bloggers like this: