ரூ 55 கோடிக்கு வீடு வாங்கியுள்ள 6 வயது சிறுமி.

ரூ 55 கோடிக்கு வீடு வாங்கியுள்ள 6 வயது சிறுமி.

50 வருஷமா உழைக்கிறேன் ஒரு சென்ட் நிலம் கூட வாங்க முடியவில்லை என்று புலம்புகிறதை கேட்டிருக்கிறோம். ஆனால் 6 வயது சிறுமி ரூ 55 கோடிக்குச் சொந்தமா வீட்டையே வாங்கியிருக்கான்னா நமக்கு ஆச்சரியம் தானே. அதுவும் அவளது உழைப்பில் வந்த பணத்தின் மூலம் வாங்கியிருக்கிறாள். இந்த செய்தி தற்போது வைரலாகி வருகிறது.

55 கோடி ரூபாய்க்குச் சொந்த வீடு வாங்கியுள்ளது நமது நாட்டிலில்லை கொரியாவில். தென்கொரியாவைச் சேர்ந்த 6 வயது சிறுமி போரம் தான் சியோல் நகரில் உள்ள 5 மாடிகளைக் கொண்ட ரூ55 கோடி மதிப்பிலான வீட்டை வாங்கியுள்ளார். போரம் இரண்டு யூடிப் சேனல் நடத்தி வருகிறார். அதில் ஒன்று குழந்தைகள் விளையாடும் பொம்மைகளைக் குறித்து ரிவியு அதாவது பொம்மைகளைப் பற்றிய விமர்சனம் செய்து வருகிறார். இன்னொரு சேனலும் குழந்தைகளுக்கான சேனலாகவே நடத்தி வருகிறார்.

சிறுமி போரம்-ன் யூடியூப் சேனல் உலகளவில் குழந்தைகள் மத்தியில் மட்டுமல்லாமல் பெரியோர்கள் மத்தியிலும் சேர்ந்துள்ளது. பல கோடி பேர் போரம்மின் சேனலை சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். இவளது இரண்டு சேனல்களிலும் 3 கோடிக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். இவரின் வீடியோக்களால் மாதம் ரூ21 லட்சம் யூடியூப் மூலம் வருமானமாக வருகிறது. இதன் மூலமாகத்தான் போரம்மின் பெற்றோர் ரூ55 கோடி மதிப்பிலான வீட்டை வாங்கியுள்ளார்கள்.

Leave a Reply

%d bloggers like this: