10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.52 ஆயிரம் ஊதியத்தில் வேலை!

550

[the_ad id=”7250″]

10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.52 ஆயிரம் ஊதியத்தில் வேலை!

தமிழக வனத்துறையில் காலியாக உள்ள வனக் காவலர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைகளுக்கு நேரடி நியமனம் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர்கள் தேர்வுக் குழுமம் இந்த அறிவிப்பை வெளியிட்டது. மொத்தம் 564 வனக்காவலர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர்கள் தேர்வுக் குழுமம்

மேலாண்மை : தமிழ்நாடு அரசு

பணி : வனக் காவலர்

மொத்த காலிப் பணியிடம் : 564

கல்வித் தகுதி : வனக்காவலர் பணிக்கு குறைந்தபட்ச பொதுக் கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது.

வயது வரம்பு : பொது பிரிவினர் 01.07.2019 அன்று, குறைந்தபட்சமாக 21 வயது முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். எஸ்.சி / எஸ்.டி / பி.சி / எம்.பி.சி பிரிவினர், ஆதரவற்ற விதவைகள் உள்ளிட்டோர் குறைந்தபட்சம் 21 வயது முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். முன்னாள் ராணுவத்தினருக்கு குறைந்தபட்ச வயது 21 முதல் அதிகபட்ச வயது 30 இருக்க வேண்டும்.

[the_ad id=”7251″]

ஊதியம் : ரூ.16,600 முதல் ரூ. 52,400 வரையில்

விண்ணப்பிக்கும் முறை : https://www.forests.tn.gov.in/ அல்லது https://tnfusrc.in/drfwmay19/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : கணினி வழித் தேர்வு, உடற்தகுதி தேர்வு, உடற்திறன் தேர்வு என மூன்று கட்டங்களாகத் தேர்வு நடத்தப்படும். கணினி வழித் தேர்வு வினாத்தாள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம் : தேர்வுக் கட்டணமாக ரூ.150 செலுத்த வேண்டும். ஆன்லைன் மூலமோ இந்தியன் வங்கி Chellan மூலமோ தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : ஆகஸ்ட் 10, 2019

ஆன்லைனில் கட்டணம் செலுத்தக் கடைசி நாள் : ஆகஸ்ட் 10, 2019 (மாலை 5 மணிக்குள் செலுத்த வேண்டும்.)

இந்தியன் வங்கி மூலம் கட்டணம் செலுத்த கடைசி நாள் : ஆகஸ்ட் 12, 2019 (பிற்பகல் 2 மணி வரை)

பூர்த்தி செய்த விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய கடைசி நாள் : ஆகஸ்ட் 12, 2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://tinyurl.com/y4oppdeg என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


[the_ad id=”7252″]

[the_ad id=”7250″]




%d bloggers like this: