ராட்டினம் விபத்து

தீம் பார்க்கின் பிரம்மாண்ட ராட்டினம் முறிந்து விழுந்தது.

Hits: 358

தீம் பார்க்கின் பிரம்மாண்ட ராட்டினம் முறிந்து விழுந்தது.

குஜராத் மாநிலத்திலுள்ள தீம் பார்க் ஒன்றில் பிரம்மாண்ட ராட்டினம் முறிந்து விழுந்துள்ளது. ராட்டினம் முறிந்து விழும் கடைசி நிமிட வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

குஜராத் மாநிலத்தின் அஹமதபாத்தில் பிரபலமான தீம் பார்க் ஒன்று உள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் பலர் தீம் பார்க்கில் உள்ள ராட்டினங்களில் குழந்தைகளோடு சுற்றி மகிழ்ந்துள்ளனர்.

ஜாய்ரைட் எனப்படும் பிரம்மாண்ட ராட்டினத்தில் பலர் ஏறியுள்ளனர். ஊஞ்சல் போல பயணிகளை மொத்தமாக எடுத்து செல்லும் அந்த ராட்டினம் உயர செல்லும்போது தாங்கி செல்லும் ராடுகள் உடைந்து ராட்டினம் உயரத்திலிருந்து அப்படியே கீழே விழுந்தது. இந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர் என்றும்  26 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீம் பார்க் நிறுவனர் உட்பட 6 பேர் மேல் வழக்குப்பதிவு செய்து போலீஸார்  விசாரித்து வருகின்றனர். தீம் பார்க் மூடப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் ராட்டின விபத்து ஏற்பட்டது.

இது குறித்து உடனடி நடவடிக்கை எடுத்த முதல்வர் விஜய் ரூபானி இதுபோன்ற தீம் பார்க்குகளில் உள்ள பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

 

 




Leave a Reply