சென்னை பூங்கா ஒன்றில் பெரிய ராட்டினத்தின் பகுதி அறுந்து விபத்து.

சென்னை பூங்கா ஒன்றில் பெரிய ராட்டினத்தின் பகுதி அறுந்து விபத்து.

தனியார் பொழுதுபோக்கு பூங்காவில் ராட்ச ராட்டினத்தின் ஒரு பகுதி அறுந்து விழுந்ததில் 12 பேர் காயமடைந்தனர்.

சென்னை பூந்தமல்லி அருகே உள்ள குயின்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்காவில் ராட்ச ராட்டினத்தின் ஒரு பகுதி அறுந்து விழுந்ததில் 12 பேர் காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து, இந்த பொழுதுபோக்கு பூங்காவை தற்காலிகமாக மூட காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

சென்னை பூந்தமல்லியை அடுத்த பழஞ்சூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான குயின்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்கா உள்ளது. இந்த பூங்காவிற்கு சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர். இங்கு ப்ரீ பால் டவர் எனப்படும் ஒரு ராட்ச ராட்டினம் உள்ளது.



உயரமான இந்த ராட்சத ராட்டினத்தில் சுற்றலாப் பயணிகள் அமர்ந்ததும், ஒன்றன்பின் ஒன்றாக மேலே சென்று, அங்கிருந்து வேகமாக கீழே இறங்கும். இந்த ராட்டினத்தில் வழக்கம்போல், ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏறி உற்சாகமாக விளையாடி கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக, அந்த ராட்டினத்தின் ஒரு பகுதியில் உள்ள ‘ரோப்’ திடீரென அறுந்ததால் அந்த ராட்டினம் கீழே விழுந்தது.

சம்பவம் நடந்து மூன்று நாட்கள் ஆனாலும் இன்றுதான் இந்த விபத்து வீடியோ சமூக வலைதளங்களில் பரவத்தொடங்கியது. இதனையடுத்து நசரத்பேட்டை காவல்துறை  விபத்து பற்றிய விசாரணையை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று, மீண்டும் உத்தரவு வரும் வரை குயின்ஸ்லாண்ட் பூங்காவை மூட காவல்துறை உத்தரவிட்டுள்ளது. பூங்காவில் அனைத்து பொழுதுபோக்கு சாதனங்களும் ஆய்வு செய்தபின் வருவாய் துறையினர் பாதுகாப்பாக இருக்கிறது என்று கூறியபிறகே பூங்கா திறக்கப்படும் என்று காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.






Leave a Reply

%d bloggers like this: