ரயில்வேயில் சுமார் 1800 பேருக்கு அப்ரண்டிஸ் பயிற்சி!

476

ரயில்வேயில் சுமார் 1800 பேருக்கு அப்ரண்டிஸ் பயிற்சி!

தென்கிழக்கு ரயில்வே துறை காலியாக உள்ள அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போது வெளியாக உள்ள இந்த அறிவிப்பின் படி சுமார் 1,785 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தென்கிழக்கு ரயில்வே துறை

மேலாண்மை : மத்திய அரசு

பணி : பயிற்சிப் பணியிடம்

மொத்த காலிப் பணியிடம் : 1785

பணியிட விபரம் : ஃபிட்டர், டர்னர், எலெக்ட்ரீசியன், ஏசி மெக்கானிக், பெயிண்டர், மெக்கானிக் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கல்வித் தகுதி : மேற்குறிப்பிட்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 50 சதவிகித மதிப்பெண்களுடன் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று சம்பந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு : 15 முதல் 24 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடம் : இதில் தேர்வு செய்யப்படுவோர் தென்கிழக்கு மாநிலங்களில் பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட அப்ரண்டிஸ் பணியிடத்திற்குச் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.rrcser.co.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலமாக விண்ணப்பம் பெற்று அதனைப் பூர்த்தி செய்து, 2020 பிப்ரவரி 3-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் : விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 3 பிப்ரவரி 2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
%d bloggers like this: