ரயில்கள் மோதியதில் 200 க்கும் மேற்பட்டோர் காயம்

மலேசியாவில் ரயில்கள் மோதியதில் 200 க்கும் மேற்பட்டோர் காயம்.

473

மலேசியாவில் ரயில்கள் மோதியதில் 200 க்கும் மேற்பட்டோர் காயம்.

மலேசியாவில் திங்கள்கிழமை (நேற்று) தலைநகர் கோலாலம்பூரில் உள்ள பெட்ரோனாஸ் இரட்டை கோபுரங்களுக்கு அருகே சுரங்கப்பாதையில் இரண்டு மெட்ரோ ரயில்கள் மோதியதில் 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக மலேசியா அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த கோர சம்பவம் நேற்று இரவு 8.45 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. விபத்தில் நாற்பத்தேழு பேர் பலத்த காயமடைந்தனர், மேலும் 166 பேருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டன. பெட்ரோனாஸ் கோபுரங்களுக்கு வெளியே உள்ள கே.எல்.சி.சி நிலையத்திலிருந்து சுமார் 100 மீட்டர் (330 அடி) தொலைவில் உள்ள சுரங்கப்பாதையின் ஒரு பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டதாக செய்தியாளர்களிடம் பேசிய அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் விபத்து பற்றி விசாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட வீடியோக்களும் புகைப்படங்களும், ரயில்களுக்குள் பலர் இரத்தக்காயங்களுடனும் இருப்பதையும், ஆங்காங்கே உடைந்த கண்ணாடிகளையும் பார்க்க முடிகிறது.

இந்த விபத்தானது மெட்ரோ துவங்கப்பட்ட 23 ஆண்டுகளில் இது முதல் பெரிய விபத்து என்று மலேசியாவின் போக்குவரத்து அமைச்சர் கூறினார், மேலும் விபத்து தொடர்பாக முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட்டு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

Our Facebook Page
%d bloggers like this: