பெரம்பலூரில் கொரோனாவுக்கு முதியவர் உயிரிழந்தார்

மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்தவர் மரணம்.

605

மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்தவர் மரணம்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள வெங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 59). இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் அரும்பாவூர் சென்று விட்டு, வெங்கலம் நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தார். வெங்கலம் அருகே வந்தபோது தொண்டமாந்துறையை சேர்ந்த பிலிப்குமார்(29) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், ராஜேந்திரனின் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ராஜேந்திரன் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினத்தந்தி




%d bloggers like this: