மொபட்டில் இருந்து நிலைதடுமாறி விழுந்தவர் பலி

மொபட்டில் இருந்து நிலைதடுமாறி விழுந்தவர் பலி

603

மொபட்டில் இருந்து நிலைதடுமாறி விழுந்தவர் பலி.

மொபட்டில் இருந்து நிலைதடுமாறி விழுந்த இறைச்சிக்கடை உரிமையாளர் பரிதாபமாக இறந்தார்.

பெரம்பலூர் மாவட்டம், புதுநடுவலூர் தெற்குத்தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது 40). இவர் பெரம்பலூர்-துறையூர் சாலையில் இறைச்சிக்கடை வைத்து நடத்தி வந்தார். நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல் வியாபாரத்தை முடித்து கொண்டு, செந்தில்குமார் வீட்டிற்கு மொபட்டில் சென்றார். அரணாரை-புதுநடுவலூர் சாலையில் மருதையான் கோவில் அருகே சென்றபோது, மொபட் கட்டுப்பாட்டை இழந்ததில் அதில் இருந்து நிலைதடுமாறி செந்தில்குமார் கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதனை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் செந்தில்குமாரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் செந்தில்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த செந்தில்குமாருக்கு உமா என்ற மனைவியும், திர்தேவ் (7), ரக்‌ஷித்தேவ் (5) ஆகிய 2 மகன்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Our Facebook Page

Keywords: நிலைதடுமாறி விழுந்தவர் பலி
%d bloggers like this: