பெரம்பலூரில் பெய்த மழைக்கு விளையாட்டு மைதான சுவர் இடிந்தது

பெரம்பலூரில் பெய்த மழைக்கு விளையாட்டு மைதான சுவர் இடிந்தது


பெரம்பலூரில் பெய்த பலத்த மழைக்கு நகராட்சியின் 13 வது வார்டு சங்குப்பேட்டை அழகிரி தெருவை சேர்ந்த பிச்சை (43) என்பவரது கூரை வீட்டின் பின்புற சுவர் சரிந்து விழுந்தது. அதன் பக்கவாட்டு சுவர் பிளந்து அடுத்த மழைக்கு சரியும் அபாயம் உள்ளது. பின்சுவர் சரிந்தாள் பழைய டிஜிட்டல் பேனர் ஒன்றை வாங்கி மறைவு கட்டி ஆபத்தான நிலையில் குடியிருந்து வருகின்றனர்.

இதேபோல் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தின் பின்புறத்தின் 100 மீட்டர் நீளமுள்ள சுற்றுச்சுவர் சரிந்து விழுந்துள்ளது. மைதானத்தின் பின்பக்க சுற்றுச்சுவர் சரிந்து விழுந்தது விளையாட்டு வீரர்கள், விளையாட்டு ஆர்வலர்கள், நடைபயிற்சியாளர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply

%d bloggers like this: