மேல்நிலை பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்களுக்கு வாய்ப்பு.

மேல்நிலை பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்களுக்கு வாய்ப்பு.


தேர்வுத் துறையால் அறிவிக்கப்பட்ட நாள்களில் மேல்நிலை பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள், சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் (தட்கல்) விண்ணப்பிக்கலாம்.

மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்கள், சிறப்புத் துணைத் தேர்வெழுத ஏப். 8 முதல் 12 ஆம் தேதி வரை அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் சேவை மையங்களில் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டது.

அறிவிக்கப்பட்ட தேதிகளில் ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தவறி, தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்களிடமிருந்து சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் ஆன்லைனில் விண்ணப்பிக்க, கல்வி மாவட்டத்தில் அரசுத் தேர்வுத் துறை சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. தனித்தேர்வர்கள் ஏப். 15, 16 ஆகிய தேதிகளில் அங்கு சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தனியார் கனிணி மையங்கள மூலம் விண்ணப்பிக்க இயலாது. கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அரசுத் தேர்வுத்துறை சேவை மையங்களின் விவரத்தை ‌w‌w‌w.‌d‌g‌e.‌t‌n.‌g‌o‌v.‌i‌n  எனும் இணையத்தில் அறிந்துகொள்ளலாம்.

தனித்தேர்வர்கள் செலுத்த வேண்டிய தேர்வுத் கட்டணத் தொகை பதிவுச் சீட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும். தேர்வுக் கட்டணத்துடன் கூடுதலாக சிறப்பு அனுமதி கட்டணமாக ரூ. 1,000 மற்றும் ஆன்லைன் பதிவுக் கட்டணமாக ரூ. 50  அரசுத் தேர்வுத் துறை சேவை மையத்தில் ரொக்கமாக செலுத்த வேண்டும்.

தேர்வுக் கூட அனுமதிச் சீட்டுகளை இணையத்தில் பதிவிறக்க வேண்டும். பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள்கள் பின்னர் அறிவிக்கப்படும். இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிவுரைகளின்படி (தேர்வுக் கட்டண விவரம் தவிர்த்து) வயது வரம்பு, கல்வித் தகுதி மற்றும் பாடங்கள் வகைப்பாடு அறிந்து விண்ணப்பிக்க வேண்டும்.

தனித்தேர்வர்களுக்கு தற்போது வழங்கப்படும் அனுமதி முற்றிலும் தற்காலிகமானது. தனித்தேர்வர்களின் விண்ணப்பம் மற்றும் தகுதி குறித்து ஆய்வு செய்யப்பட்ட பின்னரே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.

தினமணி

50total visits,2visits today
Leave a Reply

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this: