முள்ளங்கியிலும் பிரியாணி செய்யலாம் தெரியுமா?

452

[the_ad id=”7250″]

முள்ளங்கியிலும் பிரியாணி செய்யலாம் தெரியுமா?


மழைக்காலத்தில் அவ்வளவாகத் தாகம் எடுக்காது. இதனால், பலரும் உடலுக்குத் தேவையான அளவு தண்ணீரைக் குடிக்க மாட்டோம். அதனால் வழக்கமான உடலியல் செயல்பாடுகள் பாதிப்படைவதைக்கூட நாம் உணர்வதில்லை. உடலின் நீர்த் தேவையைச் சமாளிக்க நீர்ச்சத்து அதிகமுள்ள காய்கறிகளைச் சாப்பிடலாம் என்கிறார் சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த லட்சுமி சீனிவாசன். நீர்ச்சத்து அதிகமுள்ள முள்ளங்கியில் பராத்தா, பிரியாணி, வத்தக் குழம்பு உள்ளிட்ட சுவையான உணவு வகைகளைச் செய்யவும் அவர் கற்றுத்தருகிறார்.

பிரியாணி

என்னென்ன தேவை?

முள்ளங்கி – கால் கிலோ
உப்பு, மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி – தேவைக்கு
தாளிக்க
ஏலக்காய், கிராம்பு,
அன்னாசிப்பூ – தலா 1
மராட்டி மொக்கு – 2 துண்டு
பட்டை – 1 துண்டு
பிரிஞ்சி இலை – 1
வதக்க
புதினா – கால் கட்டு
வெங்காயம், தக்காளி – தலா 1
இஞ்சி – பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
தயிர் – 1 டேபிள் ஸ்பூன்
பாசுமதி அரிசி – 200 கிராம்
நெய் – 50 கிராம்
எண்ணெய் – 2 டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

பிரியாணி அரிசியை இருபது நிடமிங்கள் ஊறவைத்து, முக்கால் பதம் வேகவைத்து எடுத்துக் கொள்ளுங்கள். குக்கரில் நெய்யையும் எண்ணெய்யையும் ஊற்றி, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைச் சேர்த்து வதக்குங்கள். பின்னர் முள்ளங்கியைப் போட்டு வதக்கி, வதக்கக்கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளுங்கள். உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், தயிர் ஆகியவற்றைச் சேர்த்து வதக்குங்கள். வேகவைத்து எடுத்துவைத்திருக்கும் அரிசியைச் சேர்த்து குக்கரை அப்படியே மூடி, ஐந்து நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்துவிட்டால் முள்ளங்கி பிரியாணி தயார்.

[the_ad id=”7250″]

[the_ad id=”7251″]

[the_ad id=”7252″]




%d bloggers like this: