முறிந்த வாழை மரங்கள்

காற்றால் முறிந்த வாழை மரங்கள்: இழப்பீடு வழங்க கோரிக்கை

352

காற்றால் முறிந்த வாழை மரங்கள்: இழப்பீடு வழங்க கோரிக்கை

சூறாவளி காற்றால் முறிந்து விழுந்த வாழை மரங்களுக்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள அனுக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் அமராவதி (வயது 54). விவசாயியான இவர் தனது 2 ஏக்கர் நிலத்தில் வாழை பயிரிட்டுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இப்பகுதியில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. அப்போது பெரும்பாலான வாழை மரங்கள் காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் முறிந்து விழுந்தன. இதேபோன்று வேப்பந்தட்டை தாலுகா பகுதியில் சூறாவளி காற்றுக்கு விவசாயிகள் பலரது வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதம் அடைந்துள்ளன. இதனை அதிகாரிகள் பார்வையிட்டு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

தினத்தந்தி

Our Facebook Page
%d bloggers like this: