முதியவரை தாக்கிய சிறுவன் உட்பட 3 பேர் மீது வழக்கு.
முதியவரை தாக்கிய சிறுவன் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள வெங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் கோபால்(வயது 60). இவர் சம்பவத்தன்று தனது செல்போனை தொலைத்து விட்டார். இதையடுத்து அதே ஊரைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (50), சக்திவேல் (23) மற்றும் 15 வயது சிறுவன் ஆகிய 3 பேரிடம், செல்போனை எடுத்தீர்களா? என்று கோபால் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரஞ்சித்குமார் உள்பட 3 பேரும், எங்களை எப்படி சந்தேகப்படலாம் என்று கேட்டு கோபாலை தாக்கியதாக கூறப்படுகிறது.
இது குறித்து கோபால் அரும்பாவூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினத்தந்தி
You must log in to post a comment.