முதல்-அமைச்சர் உருவப்படம்

உதடுகளால் முதல்-அமைச்சர் உருவப்படத்தை வரைந்த மாணவர்

428

உதடுகளால் முதல்-அமைச்சர் உருவப்படத்தை வரைந்த மாணவர்

முதல்-அமைச்சரின் உருவப்படத்தை கல்லூரி மாணவர் உதடுகளால் வரைந்தார்.

பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரம் ஊராட்சியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவருடைய மகன் நரசிம்மன்(வயது 20). இவர் ஒரு தனியார் கல்லூரியில் கட்டிட வரைகலை படிப்பு படித்து வருகிறார். இவர் சாதனை புத்தகத்தில் இடம்பெறுவதற்காக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவப்படத்தை உதடுகளால் வரைய முடிவு செய்தார். அதன்படி நேற்று வாலிகண்டபுரத்தில் உள்ள வாலீஸ்வரர் கோவிலின் முன் மண்டபத்தில் சுமார் 20-க்கு 10 அடியுள்ள வெள்ளை நிற துணியை விரித்து, அதில் தனது உதடுகளில் தடவப்பட்ட சிவப்பு வண்ணத்தை (வாட்டர் கலர்) பதித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் உருவப்படத்தை வரைந்தார். அதனை வீடியோவில் பதிவு செய்து, புக்ஸ் ஆப் ரெக்கார்ட் என்ற நிறுவனத்திற்கு சாதனை தகவலை பதிவு செய்ய அனுப்ப உள்ளதாக தெரிவித்தார். அவர் படம் வரைந்ததை பொதுமக்கள் வியப்புடன் பார்த்து சென்றனர்.

Our Facebook Page

Keywords: முதல்-அமைச்சர்




%d bloggers like this: