குன்னம் பகுதியில் முக கவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு அபராதம்.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் பகுதியில் கொரோனா பரவலை தடுக்க அரசு அறிவித்த விதிமுைறகளை பின்பற்றப்படுவது குறித்து குன்னம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் துரைராஜ் ஆய்வில் ஈடுபட்டார். அப்போது கடை உரிமையாளர்களிடம், விதிகளை மீறி கடைகளை திறந்து வைக்கக்கூடாது, விதிமுறைகளை மீறி இயங்கும் கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும், என்று எச்சரித்தார். இந்த ஆய்வின்போது குன்னம் போலீஸ் ஏட்டு குமார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர். மேலும் முக கவசம் அணியாத வாகன ஓட்டிகளை நிறுத்தி அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
தினத்தந்தி
You must log in to post a comment.