முககவசம் அணியாத-சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத வர்களுக்கு அபராதம்.
பெரம்பலூர் மாவட்டத்தில் முககவசம் அணியாத- சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 158 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முககவசம் அணியாதவர்களுக்கும், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களுக்கும் சுகாதாரத்துறையினர், போலீசார், வருவாய்த்துறையினர் மற்றும் உள்ளாட்சி அமைப்பு சார்பில் அபராதம் விதிக்கப்பட்டது. அதன்படி மாவட்டத்தில் முககவசம் அணியாத 139 பேருக்கு தலா ரூ.200 வீதம் ரூ.27 ஆயிரத்து 800-ம், சமூக இடைவெளியை பின்பற்றாத 19 பேருக்கு தலா ரூ.500 வீதம் 9 ஆயிரத்து 500-ம் அபராதமாக விதிக்கப்பட்டது.
தினத்தந்தி
You must log in to post a comment.