சிங்கப்பூர் ஆற்றில் மிதந்த இறந்தவரின் உடலைக் காவல் துறையினர் கைப்பற்றினர்.

சிங்கப்பூர் ஆற்றில் மிதந்த இறந்தவரின் உடலைக் காவல் துறையினர் கைப்பற்றினர்.

30 ஜூலை (இன்று) காலை சிங்கப்பூர் ஆற்றில் இறந்த ஒருவரின் உடல் மிதந்ததைக் காவல் துறையினர் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

சிங்கப்பூரிலுள்ள அருங்காட்சியகத்திற்கு அருகிலுள்ள ஆற்றில் ஒரு மனிதனின் சடலம் மிதந்தது. தகவல் அறிந்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடலைக் கைப்பற்றினர். இது தொடர்பான விசாரணையைக் காலையில் துவங்கியுள்ளனர். உடலை மீட்ட காவல் துறையினர் மருத்துவக் குழுவுக்குத் தகவல் தெரிவித்திருந்தனர். அங்கு வந்த துணை மருத்துவர்கள் அந்த நபர் இறந்துவிட்டதை உறுதிப்படுத்தினார்கள். இந்த மரணம் குறித்துக் காவல் துறையினர் தொடர்ந்து விசாரித்து வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
Leave a Reply

%d bloggers like this: