மாவட்ட செஸ் போட்டி

பெரம்பலூரில் மாவட்ட செஸ் போட்டியில் விளையாடி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு.

45

பெரம்பலூரில் மாவட்ட செஸ் போட்டியில் விளையாடி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு.

நேற்று நடைபெற்ற மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்ட சதுரங்க கழகத்தின் சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான செஸ் (சதுரங்கம்) போட்டிகள் பெரம்பலூர் மரகதம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. இதற்கு பெரம்பலூர் மாவட்ட சதுரங்க கழகத்தின் தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். உளுந்தூர்பேட்டை தனியார் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் ஆனந்த் போட்டியினை தொடங்கி வைத்தார். 11, 14, 17 ஆகிய வயதுகளுக்கு உட்பட்ட மாணவ- மாணவிகளுக்கு தனித்தனியாக செஸ் போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டியில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ- மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டியினை அகில இந்திய சதுரங்க விளையாட்டின் நடுவர் சண்முகம் தலைமையிலான குழுவினர் போட்டியினை நடத்தினர்.

Leave a Reply

%d bloggers like this: