மாவட்ட அளவிலான சிலம்பம்

பெரம்பலூரில் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி நடைபெற்றது.

509

பெரம்பலூரில் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்ட சிலம்பம் அசோசியேசன் சார்பில், மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி வெங்கடேசபுரத்தில் நேற்று நடந்தது.

போட்டிக்கு அசோசியேசன் தலைவர் அரவிந்தன் தலைமை தாங்கினார். செயலாளர் கலியமூர்த்தி முன்னிலை வகித்தார். சிலம்ப போட்டியினை பெரம்பலூர் மாவட்ட ஜூடோ அசோசியேசன் தலைவர் கார்த்திக், தமிழ்நாடு சிலம்பாட்ட கழகத்தின் போட்டிகள் இயக்குனர் விக்டர் குழந்தைராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

சப்-ஜூனியர், ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் ஆகிய பிரிவுகளாக பிரிக்கப்பட்டு 10 வயது முதல் 34 வயது வரை உள்ள ஆண், பெண்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. தொடுமுறை, நெடுங்கம்பு, ரெட்டைகம்பு வரிசை, சுருள்வாள், வேல்கம்பு, வாள்கேடயம் ஆகிய 6 வகையான போட்டிகள் நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட சிலம்ப வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. போட்டியில் முதல் இடம் பிடித்த வீரர்-வீராங்கனைகள் வருகிற 4, 5, 6-ந் தேதிகளில் திருப்பூர் மாவட்டம் வையம்பத்தில் நடைபெறவுள்ள மாநில அளவிலான சிலம்ப போட்டிகளில் கலந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

keywords: Perambalur, Perambalur News, Perambalur News Today, பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டம்
%d bloggers like this: