உங்களுக்கு எப்பவும் மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப இத படிங்க.

உங்களுக்கு எப்பவும் மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப இத படிங்க.


மனித உடலில் இதயம் மிகவும் முக்கியமான உறுப்பு. எனவே இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். அதற்கு உண்ணும் உணவுகளில் முதலில் கவனத்தை செலுத்த வேண்டும். தற்போது ஏராளமான டயட்டுகள் மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. அதில் ஒன்று தான் கார்டியாக் டயட். அதாவது இந்த டயட்டில் இதயத்தின் ஆரோக்கியத்தை மற்றும் செயல்பாட்டை மேம்படுத்த உதவும் உணவுகள் அடங்கும்.

மேலும் இந்த டயட்டை இரத்த அழுத்த நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள் மற்றும் கொலஸ்ட்ரால் நோயாளிகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். ஏனெனில் இவர்களுக்கு இதய பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம். இந்த டயட்டை ஒருவர் மேற்கொள்வதன் மூலம் இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புக்கள் குறையும். சரி, இப்போது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் உணவுகள் எவையென்று காண்போம்.

பழங்கள் மற்றும் காய்கறிகள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் அவசியமானவை. இவை நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதோடு, உடலினுள் உள்ள அழற்சியைக் குறைத்து, உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கிடைக்கச் செய்யும். ஜங்க் உணவுகளைத் தவிர்த்து ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்பதன் மூலம் பல இதய பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

தக்காளியில் உள்ள லைகோபைன் ஒரு ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகும். இது ப்ரீ ராடிக்கல்களால் ஏற்படும் அபாயத்தைத் தடுப்பதோடு, இரத்த ஓட்டத்தை சீராகப் பராமரிக்கவும் செய்யும். எனவே தக்காளியை ஒவ்வொருவரும் தங்களது டயட்டில் சேர்க்க வேண்டியது அவசியம்.

பச்சை இலைக் காய்கறிகளான பசலைக்கீரை, ப்ராக்கோலி, கேல் போன்றவற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. மேலும் இவைகளில் உள்ள வைட்டமின் கே மற்றும் டயட்டரி நைட்ரேட்டுகள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

மீன், நட்ஸ் போன்றவற்றில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் வளமான அளவில் நிறைந்துள்ளது. இவை உடலில் ட்ரைகிளிசரைடுகளின் அளவை சீராக்கி இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மற்றும் தமனிகளில் கொழுப்புக்கள் தேங்குவதைத் தடுக்கும். ஒமேகா-3 அதிகம் நிறைந்த உணவுகளைக் காண்போம்.

மீன்களுள் சால்மன், டூனா, கானாங்கெளுத்தி போன்றவற்றில் ஒமேகா-3 சிறப்பான அளவில் உள்ளது. இந்த மீன்களால் இதயத்திற்கு பல நன்மைகள் கிடைக்கும். யார் ஒருவர் வாரத்திற்கு குறைந்தது 2-3 முறை மீனை உணவில் சேர்க்கிறாரோ, டயஸ்டாலிக் அழுத்தம் சீராக இருக்கும்.

வால்நட்ஸில் நுண் ஊட்டச்சத்துக்களான காப்பர், மக்னீசியம் மற்றும் மாங்கனீசு போன்றவை அதிகம் உள்ளது. தினமும் சிறிது வால்நட்ஸை ஸ்நாக்ஸ் நேரத்தில் சாப்பிட்டால், இதய நோய்களின் அபாயம் குறைந்து, இதய ஆரோக்கியம் மேம்படும். மேலும் இது உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும் மற்றும் இரத்த அழுத்தத்தையும் குறைக்கும்.

அவகேடோவில் அற்புதமான அளவில் மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் உள்ளன. இவை இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவி புரிபவை. ஒரு நாளைக்கு ஒரு அவகேடோ பழத்தை சாப்பிட்டால், கெட்ட கொழுப்புக்கள் அல்லது கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறைவதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

இதய ஆரோக்கியத்திற்கான டயட்டில் கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்த உணவுகளின்றி முழுமையடையாது. ஏனென்றால், இதய ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் மிகவும் முக்கியமான சத்து இது தான். மருத்துவர்கள் கூட இதய ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வேண்டுமானால், ஒரு நாளைக்கு 10-25 கிராம் கரையக்கூடிய நார்ச்சத்துள்ள உணவுகளை சாப்பிட பரிந்துரைக்கின்றனர்.

பெர்ரிப் பழங்களான ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, ராஸ்ப்பெர்ரி மற்றும் ப்ளாக் பெர்ரி போன்றவற்றில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த பழங்களில் உள்ள அந்தோசையனின்கள், உடலினுள் உள்ள அழற்சியைக் குறைக்கும் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தினால் ஏற்படும் பாதிப்பைத் தடுக்கும். எனவே தினமும் ஒரு கையளவு பெர்ரிப் பழங்களை சாப்பிடும் வழக்கத்தைக் கொள்ளுங்கள்.

விதைகளில் நார்ச்சத்து மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் நிறைந்துள்ளன. ஆளி விதை, சியா விதை போன்றவை இதயத்திற்கு மிகவும் நல்லது. இந்த விதைகள் இதய பிரச்சனைகளைத் தடுப்பதோடு, இரத்த சர்க்கரை அளவு, இரத்த அழுத்த அளவு மற்றும் ட்ரைகிளிசரைடுகளின் அளவைப் பராமரிக்கவும் உதவி புரியும்.
Leave a Reply

%d bloggers like this: