புதிய செய்தி :

மாமா சொல்லும் மாவட்டச் செய்தி (30.04.2018)

மாமா சொல்லும் மாவட்டச் செய்தி.

மாப்ளே.. கொஞ்சம் புது பஸ்டாண்டுல ட்ராப் பண்றியா…

வாங்க மாமா, ஏறிக்கோங்க. வேற என்ன மாமா சேதி.

மாப்ள நாளைக்கு அதாவது மே 1ஆம் தேதி மதுக் கடைக்கு எல்லாம் லீவு

ஏன் மாமா?

மே தினம் அதாவது தொழிலாளர் தினமில்லையா அதனால லீவு. நம்ம மாவட்டத்துல நாளைக்கு கல்லத்தனமா மதுபானம் விற்பனை செஞ்சா சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்னு நம்ம கலெக்டரம்மா சொல்லிருக்காங்க.

நேற்று என்ன மாமா புறநகர்ப் பேருந்து நிலையத்துல பாரதிதாசன் சிலைபக்கம் ஒரே கூட்டமா இருந்துச்சு, சிலைக்கு மாலையெல்லாம் போட்டாங்க.

ஆமா மாப்பள, பாவேந்தர் பாரதிதாசன் அவர்களோட 128 ஆவது பிறந்தநாளுக்கு மரியாதை செய்யும் விதமா மாலை அணிவிச்சாங்க. நம்ம மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவை சார்புல விழாவும் கொண்டாடினாங்க.

அப்படியா 128ஆவது பிறந்ததினமா? நல்லது மாமா இன்னும் மறக்காம இவரை நியாபகம் வச்சிருக்காங்களே.. வேற என்ன மாமா செய்தி?

நம்மா மாவட்டத்தோட கலை பண்பாட்டுத் துறை சார்பா நாளை மறுநாள் முதல் கோடைக் கால சிறப்பு பயிற்சி நடத்தப் போறாங்க. உனக்கு தெரிஞ்ச மாணவ மாணவிகள் இருந்தாங்கன்னா அவங்ககிட்டே சொல்லு…

இந்த சிறப்பு பயிற்சி என்ன சொல்லிக் கொடுப்பாங்க மாமா?

குரலிசை, நடனம், ஓவியம், சிலம்பம்னு 5 வயசிலேர்ந்து 16 வயதுக்குள்ள மாணவ மாணவிகளுக்கு  சொல்லிக் கொடுக்கப்பாங்களாம்.

எங்கே மாமா பயிற்சி தரப்போறாங்க.

பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில காலை பத்து மணிக்கு ஆரம்பித்து மதியம்  ஒரு மணி வரைக்கும்  பயிற்சி தருவாங்க.

மாமா; நான் கூட ஒன்னு கேள்விப்பட்டேன் உன்மையா?

என்னன்னு சொல்லுங்க மாப்ள.

நம்ம பெரம்பலூர்ல மே ஐந்தாம் தேதி கேரம், டெபிள்டென்னிஸ் போட்டிகளும் மாவட்ட அளவுல நடத்தப் போராங்கலாமே அப்படியா?

ஆமா ஆமா, சரியாதான் சொன்னே மரகதம் மெட்ரிக்பள்ளியிலத்தான் நடத்தப் போறாங்கன்னு நினைக்கிறேன். நேற்று முந்தைய நாள்கூட சதுரங்கப் போட்டி நடத்தி வெற்றிப் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளைக் கூட வழங்கி இருக்காங்க..

சரி சரி என்னை இங்கயே விட்டுடு, நான் இப்படியே கலெக்டர் ஆபிஸ் போயிட்டு வரேன். பாத்து பைக்க கண்ட இடத்தில நிறுத்தாம அதுக்கான இடத்தில நிறுத்திட்டு எங்கப் போறதா இருந்தாலும் போயிட்டு வா.

சரி மாமா நாளைக்கு பார்ப்போம்..

 
Leave a Reply