லப்பைக்குடிக்காட்டில் மாபெரும் திருக்குர்ஆன் மாநாடு.

Hits: 3

லப்பைக்குடிக்காட்டில் மாபெரும் திருக்குர்ஆன் மாநாடு.


பெரம்பலூர் மாவட்டம் லப்பைக்குடிக்காட்டில் மாபெரும் திருக்குர்ஆன் மாநாடு வரும் 31ஆம் தேதி நடைபெற இருக்கிறது.


சென்ற வருடம் போல இந்த வருடமும் லப்பைக்குடிக்காட்டில்  திருக்குர் ஆன் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை லப்பைக்குடிக்காடு இரு மஹல்லா மற்றும் நகர ஜமாஅத்துல் உலமா இணைந்து நடத்துகின்றது.


31.03.2018 ஞாயிற்றுக்கிழமை (ஹிஜ்ரி 1440, ரஜப் மாதம் பிறை 23) அன்று காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த மாபெரும் திருக்குர்ஆன் மாநாடு கிழக்கு ஜும்ஆ பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற இருக்கிறது.


மூன்று அமர்வுகளாக இந்த மாநாடு நடைபெற இருக்கிறது.


முதல் அமர்வு:

காலை 9.00 மணி முதல் லுஹர் நேரம் வரையிலும் நடைபெற இருக்கிறது.

சிறப்புரை:

மௌலானா மௌலவி ஹாபிழ், M. முஹம்மது இப்ராஹிம் மக்தூமி

தலைமை இமாம், நூருல் இஸ்லாம் மஸ்ஜித், சேலம்

தலைப்பு: அல் குர்ஆன் கூறும் பொருளாதார அமைப்பு


சிறப்புரை:

மௌலானா மௌலவி ஹாபிழ், S. முஹம்மது ஷகீல்  தாவூதி

முதல்வர், இஸ்சானுல் உம்பான் அரபிக்கல்லூரி, மதுரை

தலைப்பு: அல் குர்ஆன் கூறும் குடும்பவியல்.


இரண்டாம் அமர்வு:

மதியம் 2.30 மணி முதல் அஸர் நேரம் வரையிலும் உலமா பெருமக்களின் பட்டிமன்றம்.

தலைப்பு:-

சமூக சீர்திருத்தத்திற்கு பெரிதும் காரணம் வீட்டுச் சூழலா?  வெளிச் சூழலா?

நடுவர்:

மௌலானா மௌலவி ஹாபிழ், T.M. சாகுல் ஹமீது பாக்கவி

தலைமை இமாம், முதல்வர் அன்னை பாத்திமா பெண்கள் அரபிக் கல்லூரி – தோப்புத்தறை.


மூன்றாம் அமர்வு:

மாலை 5.30 மணி முதல் 9.00 மணிவரை.

தமிழகத்தின் தலைசிறந்த காரிகள் பங்குபெறும் கிராஅத் நிகழ்ச்சிகள்.

சிறப்புரை: 

மௌலான மௌலவி ஹாபிழ் அல்ஹாஜ் S.S. ஹைதர் அலி மிஸ்பாஹி

முதல்வர், உஸ்மானியா அரபிக் கல்லூரி, மேலப்பாளையம்.

தலைப்பு:

மாற்றங்களை ஏற்படுத்தும் மாமறை குர்ஆன்


இந்த திருக்குர்ஆன் மாநாட்டின் நிகழ்ச்சிகள் அனைத்தும்

kallaru Islam என்ற YouTube சேனல் வழியாக நேரடியாக காணலாம்.


இந்த சிறப்புமிகு நிகழ்ச்சியில் ஜமாஅத்தார்கள் அனைவரும் திரளாக கலந்துக் கொண்டு விழாவினை சிறப்பிக்குமாறு அன்போடு கேட்டு கொள்கிறார்கள்.

இரு மஹல்லா மற்றும் நகர ஜமா அத்துல் உலமா, லப்பைக்குடிக்காடு.
Leave a Reply