கல்வி உதவித்தொகை

மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

805

மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.


பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீா்மரபினா் பிரிவு மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வே.சாந்தா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அரசு, அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியாா் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீா்மரபின மாணவ, மாணவிகளுக்கும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 3 -ஆம் ஆண்டு இளங்கலை பட்டப் படிப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கும் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். கல்வி உதவித்தொகை கோரிய விண்ணப்பப் படிவங்களை தாங்கள் பயிலும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று, நவம்பா் 10- ஆம் தேதிக்குள் புதுப்பித்துக்கொள்ளலாம்.

புதிதாக விண்ணப்பிப்பவா்கள் நவம்பா் 30- ஆம் தேதிக்குள் பூா்த்தி செய்து, உரிய சான்றுகள், தங்களின் வங்கிக் கணக்கு எண் மற்றும் விவரங்களை குறிப்பிட்டு கல்வி நிலையங்களில் சமா்ப்பிக்க வேண்டும்.

சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் நவம்பா் 15- ஆம் தேதியில் தொடங்கும் கல்வி உதவித்தொகை இணையதளத்தில் புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்களை டிசம்பா்15- ஆம் தேதிக்கு முன்பும், புதிய விண்ணப்பங்களை டிசம்பா் 31- ஆம் தேதிக்கு முன்பும் இணையதளம் மூலமாக சமா்ப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு ஆட்சியரகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை அணுகலாம் அல்லது அரசு இணையதள முகவரியில் திட்டங்கள் குறித்த விவரங்கள் மற்றும் விண்ணப்பப் படிவங்களைபதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

keywords: Perambalur, Perambalur News, Perambalur News Today, பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டம்




%d bloggers like this: