பெரம்பலூரில் மழைநீர் சேகரிப்பு வலியுறுத்தி இருசக்கர பேரணி

Hits: 17

பெரம்பலூரில் மழைநீர் சேகரிப்பு வலியுறுத்தி இருசக்கர பேரணி

பெரம்பலூர் நகராட்சி நிர்வாகமும் பெரம்பலூர் கட்டுமான தொழிலாளர் சங்கமும் இணைந்து, மத்திய அரசின் ஜனசக்தி அபியான் திட்டம் எனப்படும் நீர் மேலாண்மை இயக்கத்தின் சார்பாக, மழைநீர் சேகரிப்பு குறித்த இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை நேற்று நடத்தியது.

பெரம்பலூர் நகராட்சி அலுவலகம் முன்பு தொடங்கிய இந்த மழைநீர் சேகரிப்பு குறித்த இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை நகராட்சி மேலாளர் சந்திரா கொடியசைத்து தொடங்கி வைத்தார். பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்திலிருந்து புறநகர் பேருந்து நிலையம், பாலக்கரை, வெங்கடேசபுரம், ரோவர் வளைவு, சங்குப் பேட்டை, தேரடி, பெரியகடைவீதி, கனரா வங்கி, பழைய பஸ் ஸ்டாண்டு, காமராஜர் விளைவு வழியாக மீண்டும் நகராட்சி அலுவலகத்தில் முடிவடைந்தது.

இந்தப் பேரணியில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திய வாறு கட்டுமான பொறியாளர் சங்கத்தினர் இருசக்கர வாகனத்தில் பயணித்தனர்.

தினகரன்

Leave a Reply