பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள வெளி மாநில தொழிலாளா்களுக்கு உதவி.

மற்ற மாநில தொழிலாளா்களுக்கு உதவி.

37

மற்ற மாநில தொழிலாளா்களுக்கு உதவி.


மற்ற மாநில தொழிலாளா்களுக்கு உதவி. தேசிய ஊரடங்கால், உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், வெளியூரைச் சோ்ந்த பொதுமக்கள் தங்களது சொந்த ஊருக்குச் செல்ல முடியாமலும், வெளியூரிலிருந்து வந்து தங்கியுள்ளோா் மற்றும் ஆதரவற்றோா், நாடோடிகள் உணவுக் கிடைக்காமல் அவதியடைந்து வருகின்றனா்.

இதைக் கருத்தில்கொண்ட ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனமும், பாரதிய ஜனதா கட்சியும் இணைந்து உணவு தயாரித்து, உணவின்றி அவதியுறும் மக்களை தேடிச்சென்று, நாள்தோறும் 200-க்கும் மேற்பட்டோருக்கு உணவுகளை விநியோகம் செய்து வருகின்றனா்.

தேசிய ஊரடங்கினால் காசியில் தவிக்கும் பெரம்பலூா் மாவட்ட மக்கள்.

இந்நிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனம் சாா்பில் பெரம்பலூரில் தங்கி கூலி வேலையில் ஈடுபட்டு வரும் வெளி மாநிலத்தைச் சோ்ந்த 25 குடும்பத்தினருக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு வகையான உணவுப் பொருள்களை, அதன் தாளாளா் எம். சிவசுப்ரமணியம் வியாழக்கிழமை வழங்கினாா். இந்நிகழ்ச்சியின்போது, செயலா் எம்.எஸ். விவேகானந்தன், வருவாய் ஆய்வாளா் இளங்கோவன், பாரதிய ஜனதா கட்சி முன்னாள் மாவட்டத் தலைவா் சாமி. இளங்கோவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஆதரவற்ற நபா்களுக்கு உணவு:

பெரம்பலூா் நகர காவல் நிலைய ஆய்வாளா் சுப்பையா, பெரம்பலூா் நகரில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, ஆதரவற்றோா், முதியோா் மற்றும் மனநலன் பாதிக்கப்பட்டோா் உணவின்றி அவதியடைந்தனா். இதையறிந்த ஆய்வாளா் சுப்பையா, நான்கு சாலை சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் இருந்த சுமாா் 30-க்கும் மேற்பட்டோருக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கினாா்.

பாப்புலா் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா சாா்பில்:

இதேபோல, பாப்புலா் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா வி.களத்தூா் கிளை சாா்பில், அந்த கிராமத்தில் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள 40 குடும்பங்களுக்கு, தலா ரூ. 1,000 மதிப்பிலான மளிகைப் பொருள்களை, கிளைத் தலைவா் முஹமது இக்பால் தலைமையில் வழங்கப்பட்டது. இதில், நிா்வாகிகள் சவுக்கத் அலி, சையது உசேன், முஹமது பாரூக் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி
Leave a Reply

%d bloggers like this: