கோவில் அருகே தங்கியிருந்தவர் மர்மமான முறையில் சாவு.
கோவில் அருகே தங்கியிருந்தவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் பெருமுளை கிராமத்தை சேர்ந்தவர் பொற்செழியன் (வயது 55). இவருக்கு மலர்கொடி என்ற மனைவியும், மிதுன் என்ற மகனும், மது என்ற மகளும் உள்ளனர். பொற்செழியன் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் சண்டை போட்டுவிட்டு வெளியே சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பாததால், அவரை உறவினர்கள் தேடினர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கீழப்புலியூர் கிராமத்தில் உள்ள மருதையன் கோவில் அருகே தங்கியிருந்த பொற்செழியன், தனக்கு வயிற்றுவலி உள்ளதாக அருகில் இருந்தவர்களிடம் கூறியுள்ளார். நேற்று காலை பார்த்தபோது பொற்செழியன், மர்மமான முறையில் அங்கு இறந்து கிடந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த மங்களமேடு போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினத்தந்தி
You must log in to post a comment.