குழந்தைக்கான மருத்துவ ஆலோசனை.

541

[the_ad id=”7251″]

குழந்தைக்கான மருத்துவ ஆலோசனை.

குழந்தைகளின் முதல் மருத்துவரே தாய்தான். முதலில் தாய், தன் உடம்பை, ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால் மட்டுமே, பால் குடிக்கும் குழந்தைகளும் ஆரோக்கியமாக வளரும்.

குழந்தையின் எந்த ஒரு நோய்களுக்கும் காரணம் வயிற்றுக் கோளாறும், நெஞ்சு சளியும் தான்.

முதலில் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்!

நெஞ்சில் சளி இருந்தால் சரியாக செறிமானம் ஆகாது.

செரிமானம் சரியில்லையென்றால் உடல் கழிவுகள் வெளியேறுவதில் சிக்கல் உண்டாகும் .

மலச்சிக்கலுக்கான மருந்து

வேப்பங் கொழுந்து—-10கிராம்
அதிமதுரம் —-10 ”
அச்சு வெல்லம் —-10 ”
சேர்த்து அரைத்து நெய்யில் கலந்து 1ஸ்பூன் உண்ண கொடுக்க பேதியாகும். மூன்று தடவை பேதியாகி நிற்காவிடில் சிறிது புளித்த மோர், அல்லது எலுமிச்சை சாறு சிறிது கொடுத்தால் நிற்கும்.

——————————————————

குழந்தைகளுக்கு உண்டாகும் வயிற்றுப் போக்கை நிருத்த.

வசம்பு —-10 கிராம்
சுக்கு —-10 ”
ஓமம் —-10 ”
மஞ்சள் —-10 ”
பெருங்காயம் —–10 ”
நன்கு வறுத்து தூள் செய்து

வயிறு உப்பியிருந்தால் விளக்கெண்ணையிலும், வயிறு சாதாரணமாக இருந்தால் தேனிலும் 1/2ஸ்பூன் கலந்து கொடுக்க பேதி உடனே நின்று விடும்.

——————————————————

அடிக்கடி வாந்தியெடுத்தால்

புதினா இலையை நீரில் கொதிக்க வைத்து கொடுங்கள் சரியாகும்.

——————————————————

கரப்பான் சொறி சிரங்கு

கோழி முட்டை வெண்கருவை உடல் முழுவதும் தேய்த்து காய்ந்ததும் குளிக்க வைக்கவும் தினம் 1 தடவை 15நாட்களில் சரியாகும்.

——————————————————

கக்குவான் இருமல்

சிறிது படிகாரத்தை பொரித்து 2 குன்றிமணி எடை சுடு நீரில் கரலந்து 3 வேளை 6 நாள் கொடுக்க சரியாகும்.

——————————————————

கை ககால் மூட்டிகளில் வேற்குரு போல் இருந்தால்

கடுக்காய்
சீரகம்
கற்றாழை
சமமாக கலந்து அரைத்து 2 வேளை
3 நாள் உண்டால் சரியாகும்.

பொதுவான குறிப்புகள்

பசித்தால் மட்டுமே உண்ண சொல்லுங்கள். செரிக்கும் உணவுகளை மட்டுமே தேர்ந்தேடுங்கள்.

கண்டிப்பாக வாரம் ஒரு முறை
ஒரு வெற்றிலை, ஒரு பூண்டு பல் கொஞ்சம் வேப்பம் கொழுந்து தேவையான நீர் விட்டு அரைத்து வடிகட்டிவைத்துக் கொண்டு

கைக்குழந்தைக்கு – 1/2சங்கு
1 – 3 வயது குழந்தைக்கு ஒரு சங்கு
3 – 6 வயது குழந்தைக்கு இரண்டு சங்கு
6 – 10வயது குழந்தைக்கு 30 மில்லி
10 – 18 வயதுள்ளவர்களுக்கு 60 மில்லி கொடுத்து வந்தால் நெஞ்சியிலுள்ள சளி கிருமிகள் எல்லாம் மலத்துடன் வெளியேறி விடும். (வெற்றிலை, வெள்ளைப் பூண்டு, வேப்பங் கொழுந்து, தேவைக்கு கூட்டிக் கொள்ளவும்)

——————————————————

கண்டிப்பாக மாதம் ஒரு முறை

காலை எழுந்ததும் வென்னீரில் கடுக்காய் பொடி

கைக்குழந்தைக்கு கொடுக்கத் தேவையில்லை

1 – 3 வயது குழந்தைக்கு 1/2 ஸ்பூன்
3 – 6. வயது குழந்தைக்கு 1. ஸ்பூன்
6 – 10. வயது குழந்தைக்கு 1.5 ஸ்பூன்
10 – 18 வயது குழந்தைக்கு 2. ஸ்பூன்
கலந்து கொடுத்தால் 1/2 மணிக்குள் பேதியாகி வயிறு சுத்தமானதும் பேதி தானே நின்று விடும். இவற்றை சரியாக கடை பிடித்தாலே நோய்கள் நெருங்காது.

வளைகுடா செய்திகளுக்கு: http://www.gcctamilnews.com/

[the_ad id=”7252″]

[the_ad id=”7250″]
%d bloggers like this: