புதிய செய்தி :

மருத்துவப் படிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் இடம்.

மருத்துவப் படிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத் திருத்த மசோதாவை அறிமுகம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மருத்துவத்துறையில் முதுநிலைப் பட்டப்படிப்பில் சேர விரும்பும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தற்போது 3% இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் நல் உரிமைகள் சட்டம் 2016 இதற்கு வழிவகை செய்கிறது.

இந்நிலையில், புதிய சட்ட திருத்தம் மூலம் இந்த இட ஒதுக்கீட்டை 5% ஆக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். இது வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவு என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் 21 உடற்குறைபாடுகள் கொண்ட மாற்றுத்திறனாளிகள் பயனடைவார்கள்.

source: Samayam
Leave a Reply