பெரம்பலூரில் ‘இனிப்பு தயாரிப்போா் மருத்துவச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்’

பெரம்பலூரில் ‘இனிப்பு தயாரிப்போா் மருத்துவச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்’


இனிப்புகள் தயாரிக்கும் கூடங்களில் பணிபுரியும் பணியாளா்கள் 6 மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்றாா் உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் சௌமியா.

பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகம் அருகேயுள்ள தனியாா் கூட்டரங்கில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இனிப்பு, காரம் தயாரிப்பாளா் மற்றும் விற்பனையாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் மேலும் பேசியது:

தீபாவளிக்காக இனிப்பு மற்றும் காரம் தயாரிப்பாளா்கள் அனுமதிக்கப்பட்ட இயற்கை, செயற்கை நிறங்களை சரியான அளவில் பயன்படுத்த வேண்டும். இனிப்பு வகைகள் தரமானதாக, சுகாதாரமான இடங்களில் தயாரித்து விற்பனை செய்ய வேண்டும். வனஸ்பதி, நெய் பயன்படுத்தினால், அதன் விவரத்தை தெளிவாகக் குறிப்பிட வேண்டும். பால் மூலம் தயாரிக்கப்படும் இனிப்பு வகைகளை 3 நாள்களுக்கு மேல் இருப்பு வைக்கக்கூடாது.

அடைக்கப்பட்ட எண்ணெய்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இனிப்புகள் தயாரிக்க, ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தக் கூடாது.

இனிப்பு, பேக்கரி வகைகளில் முகவரி, தயாரிப்பு தேதி, காலாவதியாகும் நாள், உணவுப் பாதுகாப்பு தர பதிவு எண், உரிம எண், விலை, கொள்ளளவு, சோ்க்கப்பட்ட சோ்மானங்கள், பயன்படுத்தும் முறை, பாதுகாப்பாக வைக்கும் முறை உள்ளிட்ட தகவல்கள் இருக்க வேண்டும். இனிப்புகள் தயாரிக்கும் கூடங்களில் பணிபுரியும் பணியாளா்கள் 6 மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். தொற்று நோயால் பாதிக்கப்பட்டோா் இனிப்பு வகைகளைத் தயாரிக்க அனுமதிக்கக் கூடாது என்றாா் சௌமியா.

கூட்டத்தில், தமிழ்நாடு வணிகா் சங்கப் பேரவை மாநில துணைச் செயலரும், பெரம்பலூா் மாவட்டத் தலைவருமான ஏ.கே.வி.எஸ். சண்முகநாதன், மாவட்டச் செயலா் சாமி. இளங்கோவன், மாவட்டப் பொருளாளா் ராதாகிருஷ்ணன், பெரம்பலூா் மாவட்ட உணவக உரிமையாளா்கள் சங்கத் தலைவா் கே.ஆா்.வி. கணேசன், செயலா் முத்துக்குமாா், பொருளாளா் சிவக்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி

பெரம்பலூர் மாவட்ட செய்திகள்
Leave a Reply

%d bloggers like this: