மமக வின் மனிதநேய பணி

மமக வின் மனிதநேய பணி; சவுதியில் இறந்த வ.களத்தூர் சகோதரர் உடல் தாயகம் வந்தது.

660

மமக வின் மனிதநேய பணி; சவுதியில் இறந்த வ.களத்தூர் சகோதரர் உடல் தாயகம் வந்தது.

பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூர் கடைவீதி தெருவில் வசிக்கும் பழனிமுத்து மகன் மணி. இவர் சவுதி ரியாத்தில் டைலராக பணியிலிருந்தார். இவரது மகன் சக்திவேல் இவரும் சவுதியில் வேலை செய்து வருகிறார். கடந்த மாதம் இந்தியா திரும்புவதற்கு ஏற்பாடு செய்திருந்தார் மணி.  இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 24ந் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார்.

இச்செய்தியை அறிந்த உறவினர்கள் தமுமுக வினரின் உதவியை நாடி வ.களத்தூர் தமுமுக நகர தலைவர் ஜமீல் பாஷாவை தொடர்பு கொண்டு விவரித்தனர்.  உடனடியாக சவுதி ரியாத் தமுமுக வை தொடர்பு கொண்டு தாயகத்திற்கு உடலை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்தனர்.

விபரங்களை கேட்டறிந்த ரியாத் மண்டல சமூக நலத்துறை செயலாளர் திருப்பூண்டி அப்துல்ஹமீது அவர்கள் ரியாத் மத்திய மண்டல மமக தலைவர் மீமிசல் நூர் முஹம்மது அவர்களின் வழிகாட்டுதலின்படி மணியின் முதலாளியை தொடர்பு கொண்டு மருத்துவமனையிலிருந்து உடலை வாங்க தேவையான ஆவணங்களை ரியாத்தில் பணியில் இருந்த மணி அவர்களின் மகன் சக்திவேலுடன் இணைந்து தூதரக ஒத்துழைப்புடன் ஆவணங்களை தயார் செய்தனர்.

அதனைத் தொடர்ந்து 09-03-2021 செவ்வாய் கிழமை அன்று இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலமாக மணியின் உடல் 10-03-2021 இரவு 1 மணிக்கு சென்னை விமானநிலையம் வந்தடைந்தது.

சென்னை விமான நிலையத்தில் இருந்து மணியின் உடலை சொந்த ஊருக்கு எடுத்து செல்வதற்கான ஆம்புலன்ஸ் ஏற்பாடுகளை ரியாத் மண்டல மமக மக்கள் தொடர்பாளர் சாகிர் பேக் அவர்கள் ஏற்பாடு செய்தார்.

சென்னை விமான நிலையத்திலிருந்து அதற்கான முன்னேற்பாடுகளை வ.களத்தூர் மருத்துவ அணி செயலாளர் சாகுல் ஹமீது அவர்கள் ஏர்போர்ட் கிளியரன்ஸ் வேலைகளையும் முடித்து மணியின் உடலை வ.களத்தூருக்கு எடுத்துவரும் வரை உடனிருந்து உதவி செய்தார். மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் சுல்தான் மொய்தீன், சமூகநீதி மாணவர் இயக்கத்தின் மாவட்ட செயலாளர் முஹம்மது, வ.களத்தூர் மமக நகர தலைவர் ஜமீல் பாஷா, நகர பொருப்பாளர்கள் மற்றும் தொண்டர் அணியைச் சேர்ந்த நிர்வாகிகள், பலரும் மணியின் உடலை இறுதி சடங்கு செய்வதற்கு உதவி செய்தனர்.

மனிதநேய மிக்க இப்பணியை எதிர்பார்ப்பு இன்றி மணியின் உடலை எங்களிடம் ஒப்படைத்தீர்கள் என்று அவரது குடும்பத்தினர் நன்றி கூறினர்.

our facebook page

keywords: MMK, மமக, மனிதநேய மக்கள் கட்சி, Perambalur, Perambalur News, Perambalur News Today, பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டம்




%d bloggers like this: