தற்கொலை

ஜெயங்கொண்டம் அருகே மனைவி திட்டியதால் கணவர் தற்கொலை.

ஜெயங்கொண்டம் அருகே மனைவி திட்டியதால் கணவர் தற்கொலை.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே மனைவி திட்டியதால் கணவர் வெள்ளிக்கிழமை நள்ளிரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஜெயங்கொண்டம் அருகேயுள்ள பெரியபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் சரவணன்(55). மது அருந்தும் பழக்கம் உள்ளவர். இவர், கடந்த 14 ஆம் தேதி இரவு, மது அருந்திவிட்டு தனது மனைவி இந்திராணியிடம் தகராறில் ஈடுபட்டார்.  அப்போது இந்திராணி திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் விரக்தியில் இருந்த சரவணன், அன்று நள்ளிரவு ஊரில் உள்ள முந்திரி காட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதையறிந்த பொதுமக்கள் அவரை மீட்டு ஜயங்கொண்டம அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சரவணன் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து ஜயங்கொண்டம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி
Leave a Reply

%d bloggers like this: