குன்னம் அருகே மனுநீதி நிறைவு முகாமில் 238 பேருக்கு நல உதவி

குன்னம் அருகே மனுநீதி நிறைவு முகாமில் 238 பேருக்கு நல உதவி


புதுவேட்டக்குடி கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மனுநீதி நிறைவு நாள் முகாமில் 238 பயனாளிகளுக்கு ரூ. 1.82 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், புதுவேட்டக்குடி கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மனுநீதி நிறைவு முகாமுக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கிப் பேசினாா்.

முகாமில், வருவாய்த்துறை, ஊரக வளா்ச்சித் துறை, கூட்டுறவுத் துறை, தாட்கோ, வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலம் 238 பயனாளிகளுக்கு ரூ. 1,82,82,469 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ராஜேந்திரன், திட்ட இயக்குநா் தெய்வநாயகி, வருவாய் கோட்டாட்சியா் சுப்பையா, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் சக்திவேல், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் மஞ்சுளா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி

பெரம்பலூர் மாவட்ட செய்திகள்
Leave a Reply

%d bloggers like this: