tamimun Ansari

மனிதநேய ஜனநாயக கட்சியின் தற்போதைய நிலைப்பாடு என்ன?

மனிதநேய ஜனநாயக கட்சியின் தற்போதைய நிலைப்பாடு என்ன?

அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்துள்ள நிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் அமையும் கூட்டணியில் நாங்கள் இடம் பெறமாட்டோம் என்ற நிலைபாட்டில் உறுதியாக இருக்கிறோம். சமூக நீதி, சமூக நல்லிணக்கம், சமத்துவ ஜனநாயகம் என்பது எமது கொள்கையாகும்.

தமிழகத்தின் வாழ்வாதாரங்கள், தமிழர் உரிமைகள், பின்தங்கிய சமூகங்களின் நலன்கள் ஆகியவற்றை முன்வைத்தே எமது அரசியல் தொடரும்.

மனிதநேய ஜனநாயக கட்சியின் அடுத்தக் கட்ட அரசியல் நிலைபாடு, குறித்து எதிர்வரும் பிப்ரவரி 28 அன்று சென்னையில் கூடும் தலைமை நிர்வாக குழுவில் முடிவெடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.




Leave a Reply

%d bloggers like this: