மத்திய சென்னையில் கமீலா நாசர் போட்டியிடுவாரா?

மத்திய சென்னையில் கமீலா நாசர் போட்டியிடுவாரா?

தமிழகம் இப்போது உச்சக்கட்ட அரசியலில் பரபரப்பாகியுள்ளது. நட்சத்திர தொகுதி அந்தஸ்தை மத்திய சென்னை இப்போதே பெற்றுவிட்டது.
தி.மு.க.வில் தயாநிதி மாறன், அ.ம.மு.க. கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் தெகலான் பாகவி எனத் பெருந்தலைகள் களமிறங்கும் நிலையில், தற்போது கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் சார்பாக சென்னை மண்டல பொறுப்பாளர் கமீலா நாசர் களமிறங்குவதாக தகவல்கள் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே அக்கட்சியில்  முக்கிய தலைவர் பதவியில் இருப்பவர் நடிகர் சங்கத் தலைவர் நாசரின் மனைவியான கமீலா நாசர். மேலும் அவர் மக்கள் நீதி மய்யத்தின் உயர்மட்ட குழு உறுப்பினராகவும் விளங்கி வருகிறார்.
இந்நிலையில் தற்போது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுவதென்னவென்றால்,  வருகிற 2019ம் ஆண்டின்   நாடாளுமன்றத் தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் கமீலா நாசர் போட்டியிட துறைமுகம் கட்சி நிர்வாகிகள் விருப்பமனு அளித்துள்ளனர். இதே தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிட எழும்பூர் நிர்வாகிகள் சார்பாகவும் விருப்பமனு அளித்தனர். ஆனால், கமல் ஹாசன் தனது சொந்த ஊரான இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட முடிவெடுத்துள்ளாராம்.  ஆதலால் நிச்சயம் மத்திய சென்னையில் நாசரின் மனைவி போட்டியிட நிறைய வாய்ப்புகள் இருப்பதாக பேசப்படுகிறது .Leave a Reply

%d bloggers like this: