நெய்வேலியில் மத்திய அரசு வேலை.

நெய்வேலியில் மத்திய அரசு வேலை.

நெய்வேலி லிக்னைட் காப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள நிர்வாக பொறியாளர், துணை தலைமை பொறியாளர், உயர்வேதியியலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட்

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 35

பணி மற்றும் பணியிட விபரம் :– நிர்வாக பொறியாளர் : 08 துணை தலைமை பொறியாளர் : 15 உயிர்வேதியியலாளர் : 01 மருந்தாளர் : 02 துணை மருத்துவ அதிகாரி : 09

கல்வித் தகுதி :

நிர்வாக பொறியாளர் : பி.இ சுற்றுச்சூழல் பொறியியல்

துணை தலைமை பொறியாளர் : மெக்கானிக்கல் இன்ஜினியரிங், மின் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ரூமென்டேஷன் இன்ஜினியரிங், மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல், சுற்றுச்சூழல் பொறியியல் உள்ளிட்ட ஏதேனும் ஓர் துறையில் பி.இ முடித்திருக்க வேண்டும்.

உயிர்வேதியியலாளர் : எம்.எஸ்.சி. உயிர்வேதியியல்

மருந்தாளர் : டி.பார்மா (ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவம்)

துணை மருத்துவ அதிகாரி : எம்பிபிஎஸ் (இளங்கலை மருத்துவம் / இளங்கலை அறுவை சிகிச்சை)

 

வயது வரம்பு :-

நிர்வாக பொறியாளர் : வயது வரம்பு 39 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.

துணை தலைமை பொறியாளர் : வயது வரம்பு 47 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.

உயிர்வேதியியலாளர் : வயது வரம்பு 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.

மருந்தாளர் : வயது வரம்பு 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.

துணை மருத்துவ அதிகாரி : வயது வரம்பு 32 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.

 

ஊதியம் :-

நிர்வாக பொறியாளர் : ரூ. 70,000 முதல் ரூ.2,00,000 வரையில்

துணை தலைமை பொறியாளர் : ரூ. 80,000 முதல் ரூ.2,20,000 வரையில்

உயிர்வேதியியலாளர் : ரூ. 12,100 முதல் ரூ.33,340 வரையில்

மருந்தாளர் : ரூ.11,000 முதல் ரூ.30,320 வரையில்

துணை மருத்துவ அதிகாரி : ரூ.60,000 முதல் ரூ.1,80,000 வரையில்

 

இணைய முகவரி : https://web.nlcindia.com/rec012019

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.nlcindia.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து அந்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 25.02.2019 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The Chief General Manager (HR), Recruitment Cell, Human Resource Department, Corporate Office, NLC India Limited, Block-1, Neyveli – 607801.

தேர்வு முறை : குறுகிய பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம் :- பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் : ரூ. 300 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்ப கட்டணம் இல்லை.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.nlcindia.com/new_website/careers/advt012019.pdf அல்லது https://web.nlcindia.com/rec012019/ என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

thanks - carrerindia

4total visits,1visits today
Leave a Reply

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this: