சமீபத்திய பதிவுகள்
Search

பி.இ. பட்டதாரிகளுக்கு மத்திய அரசு வேலை.

பி.இ. பட்டதாரிகளுக்கு ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை.

தேசிய விண்வெளித் துறை ஆய்வகத்தில் காலியாக உள்ள ஆலோசகர் பணியிடத்தினை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசிற்கு உட்பட்ட இப்பணியிடத்திற்கு மாதம் ரூ.70 ஆயிரம் வரையிலும் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பி.இ பொறியியல் பட்டதாரிகள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தேசிய விண்வெளித் துறை ஆய்வகம்

மேலாண்மை : மத்திய அரசு

பணி : ஆலோசகர்

மொத்த காலிப் பணியிடம் : 01

கல்வித் தகுதி : பி.இ. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பி.இ. ஏரோனாட்டிக்கல் இன்ஜினியரிங் பி.இ. மின் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பி.டெக் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்.

வயது வரம்பு : 65 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.70,000 மாதம்

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.nal.res.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து அந்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The Controller of Administration, National Aerospace Laboratories, P.B.No.1779, HAL Airport Road, Kodihalli, Bengaluru – 560 017.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 04.03.2019 தேதிக்குள் விண்ணப்பம் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.nal.res.in/en/latestupdate?ar_id=135 அல்லது www.nal.res.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

Source - careerindiaLeave a Reply

%d bloggers like this: