மண் வளத்தை பாதுகாத்து நல்ல மகசூல் பெறலாம்.

793

திருவூர் வேளாண் அறிவியல் மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

விவசாயம் செய்யும் நிலங்களில் உள்ள மண்ணில், பயிருக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் சரியான அளவிலும், குறிப்பிட்ட விகிதத்திலும் பயிர்கள் எடுத்துக் கொள்ளும் நிலையில் இருக்க வேண்டும்.இதேபோல், அதிக கார, அமிலநிலை மற்றும் உவர்நிலை இல்லாமல், நல்ல வடிகால் வசதியோடு இருக்கும் மண்ணே வளமான மண்ணாகும். குறைய காரணம் , விளை நிலங்களில், உயர் விளைச்சல் தரும்

வீரிய ரகங்களைத் தொடர்ந்து சாகுபடி செய்வது, ரசாயன உரங்களை மட்டும் அதிக அளவில் தொடர்ந்து பயிர்களுக்கு இடுவதால், நிலங்களின் தன்மை பாதிக்கப்படுகிறது. அங்கக உரங்களாகிய தொழு உரம், பசுந்தாள் உரங்கள் மற்றும் தழை உரங்கள் ஆகியவற்றை போதிய அளவு இடாதது, சாகுபடி நிலத்தை சமப்படுத்தும் போது வளமான மேல்மண் நீக்கப்படுவது.

வடிகால் வசதியில்லாமல், பள்ளக்கால் பகுதிகளில் களர், உவர் நிலம் போன்ற பல்வேறு காரணங்களாலும், மண்ணின் வளம் குறைந்து மகசூல் பாதிக்கப்படுகிறது.

மண் பரிசோதனை செய்து, தேவைக்கேற்ப ரசாயன உரங்களை இட வேண்டும். காற்றிலுள்ள தழைச் சத்தை கிரகித்து மண்ணை வெளிப்படுத்தும் உயிர் விதை நேர்த்தி செய்ய வேண்டும்.அங்கக உரங்களாகிய தொழு உரம், பசுந்தாள் உரம் மற்றும் தழை உரங்களை போதிய அளவு இட வேண்டும். மண் பரிசோதனை மூலம், மண்ணிலுள்ள உவர் அமிலத்தன்மையை நீக்கி, மண் மேலாண்மை முறைகளை கடைப் பிடிக்க வேண்டும். போதுமான வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும். மண்ணின் வகைக்கேற்ப பயிர்களைத் தேர்ந்தெடுத்து சாகுபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு கடைப்பிடித்து, மண் வளத்தை பாதுகாத்து பயிர் செய்தால், நல்ல மகசூல் பெற முடியும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Source - vivasayam.org%d bloggers like this: