மணல் திருட்டை

மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டி வலியுறுத்தல்

446

சின்னாறு, வெள்ளாற்று பகுதிகளில் மணல் திருட்டை தடுக்க வலியுறுத்தல்.

குன்னம் அருகே சின்னாறு, வெள்ளாற்று பகுதிகளில் மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மணல் திருட்டு

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கீழப்பெரம்பலூர், வயலூர், வயலப்பாடி ஆகிய கிராம பகுதிகளில் உள்ள சின்னாறு மற்றும் வெள்ளாற்று பகுதி கரையோரங்களில் கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து அனுமதியின்றி மணல் அள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலையொட்டி வருவாய்த்துறை மற்றும் போலீசார் தேர்தல் பணியில் ஈடுபட்டதை பயன்படுத்தி, சில மர்ம நபர்கள் தொடர் மணல் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

நடவடிக்கை இல்லை

அப்பகுதி மக்கள் இது குறித்து பலமுறை வருவாய்த்துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தும், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே மணல் திருட்டை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தினத்தந்தி
%d bloggers like this: