மக்களவைத் தேர்தல் பாதுகாப்புப் பணி: முன்னாள் படைவீரர்களுக்கு அழைப்பு

மக்களவைத் தேர்தல் பாதுகாப்புப் பணி: முன்னாள் படைவீரர்களுக்கு அழைப்பு

மக்களவைத் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட, தகுதியான முன்னாள் படைவீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து  மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் பாதுகாப்புப் பணியில் முன்னாள் படைவீரர்களை அதிக அளவில் ஈடுபடுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

எனவே,  மாவட்டத்தைச் சேர்ந்த 65 வயதுக்குள்பட்ட நல்ல உடல் திறனுள்ள, அடையாள அட்டை பெற்றுள்ள முன்னாள் இளநிலை படை அலுவலர்கள், முன்னாள் படைவீரர்கள் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட விருப்பமுள்ளவர்கள், தங்களது அடையாள அட்டை மற்றும் வாக்காளர் அட்டையுடன் உதவி இயக்குநர், முன்னாள் படைவீரர் நல அலுவலகம், 72ஏ, புதிய மார்க்கெட் தெரு, அரியலூர்- 621 704 எனும் முகவரியில் நேரில் அணுகவும்.

மேலும் விவரங்களுக்கு 04329 – 221011 எனும் எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.


தினமணி

48total visits,1visits today
Leave a Reply

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this: