சிறையிலிருந்து தப்பிக்க மகளைப்போல வேடமிட்ட தந்தை: வைரல் வீடியோ.

Hits: 122

சிறையிலிருந்து தப்பிக்க மகளைப்போல வேடமிட்ட தந்தை: வைரல் வீடியோ.


பிரேசில் நாட்டை சேர்ந்தவர் கிளாவினா டா சில்வா. போதைப் பொருள் கடத்தல் செய்பவன். இவன் மீது கடலோர கிராம மக்களை மிரட்டியது, அவர்களை மூளைச்சலவை செய்து அவர்களிடம் போதைப் பொருட்கள் விற்பது. அவர்களைக் கொண்டே போதைப்பொருட்களை விற்பனை செய்வது என்று குற்றச்சாட்டுகள் இருக்கிறது. இந்தக் குற்றங்களுக்காகப் பிரேசில் போலீசார் கிளாவினாவை வலை வீசித் தேடினர்.

போலீசின் பிடியில் கிளாவினா டா சில்வா மாட்டிக்கொண்டான். அவனை போலீசார் சிறையில் அடைத்தனர்.

சிறை வாழ்க்கையிலிருந்து தப்பிக்க முயற்சி செய்துள்ளான். இதற்காகத் தனது மகளைப் போல வேடமிட்டு வெளியே தப்பிக்கத் தயார் செய்துள்ளான். இதற்காகச் சிறையிலுள்ள சிலரின் உதவியுடன் உபகரணங்களைத் தயார் செய்துள்ளான். மகள் வரும் நாளன்று வெளியேற முடிவு செய்து மகளைப் போலவே வேடமிட்டு வெளியேறும் போது காவலர்களின் பிடியில் சிக்கிவிட்டான். பெண் வேடமிட்டாலும் அவனது நடை மற்றும் முகத்தில் தெரிந்த மாற்றத்தை வைத்து சிறைக்காவலர்கள் பிடித்துவிட்டனர்.

விசாரணையில் அவன் மகளின் வேசத்தைக் கலைக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. தற்போது கிளாவினா டா சில்வா மீண்டும் சிறையில்.Leave a Reply