மகளிர் சக்தி மைய, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
மகளிர் சக்தி மைய, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தகவல்.
இது பற்றி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது. பெரம்பலூர் மாவட்ட சமூக நல அலுவலக கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் மகளிர் சக்தி மையம் திட்டத்தின்கீழ் பணிபுரிய காலியாக உள்ள மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம்.
மனித வளத் துறை, சமூக அறிவியல் திட்டம் பற்றிய புரிதலோடு சமூக நல பணிகளில் முதுகலைப்பட்டம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். பெண்களை முன்னிலைபடுத்தும் திட்டங்களை பற்றி அறிந்திருத்தல் வேண்டும். பெண்கள் தொடர்பான பிரச்சினைகளை நன்கு புரிந்து செயலாற்றும் திறனுடனும், கம்ப்யூட்டரில் பணிபுரியும் அளவிற்கு திறன் பெற்றிருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு 35-க்குள் இருத்தல் வேண்டும். இந்த பணிக்கு பெண்கள் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்திற்குள் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
மேற்கண்ட கல்வித் தகுதியும் ஆர்வமும் உடையவர்கள் தங்களது விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து பெரம்பலூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாக 01.10.2020 அன்று மாலைக்குள் கிடைக்கும்படி அனுப்பவேண்டும் என தெரிவித்துள்ளார்.
keywords: Perambalur, Perambalur News, Perambalur News Today, பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டம்.
You must log in to post a comment.