போலி வேலை வாய்ப்பை நம்பி ஏமாறாதீர்கள்!

336

போலி வேலை வாய்ப்பை நம்பி ஏமாறாதீர்கள்!

ஆன்லைனில் வேலை தேடும் போது ஒவ்வொருவரும் சந்திக்கக் கூடிய பிரச்சனை தான் இமெயில் போலி விளம்பரங்கள். ஆன்லைன் மூலம் வேலை தேடும் நாம் நமது செல் போன் எண் முதல், இமெயில் முகவரி, வீட்டு முகவரி என அனைத்தையும் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம்.

அவ்வாறு நாம் பதிவிடும் இமெயில் முகவரிக்கு தொடர்ந்து பல வேலைவாய்ப்பு குறித்த செய்திகள் வரும். அதில் எது போலி, எது உண்மை என தெரியாமலேயே இருப்போம். அவற்றிலிருந்து தப்பிக்க இதோ உங்களுக்கான சில டிப்ஸ்கள் இங்கே உள்ளன.

வேலை வாய்ப்பு இன்றைய காலகட்டத்தில் ஏதாவது ஒரு கம்பெனியில் வேலை கிடைத்து விடாதா என்று ஏங்கும் இளைஞர்கள் அதிகரித்து வருகின்றனர். நிறுவனங்களும் தங்களுக்கான பணியாட்களை பெரும்பாலும் ஆன்லைன் மூலமாகவே தேர்ந்தெடுத்தும் வருகிறது. இவ்வாறான சூழ்நிலையில் வேலை தேடுவோரின் மனநிலையை தமக்கு சாதகமாக்கிப் பல மோசடி கும்பல்கள் இமெயில் மூலம் போலியான வேலைவாய்ப்பு செய்திகளையும் அனுப்பி கொள்ளையில் ஈடுபடுகிறது.

இமெயில் முகவரி வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பாக இருந்தாலும் சரி அல்லது பணி நியமனத்திற்கான ஆணையாக இருந்தாலும் சரி எந்த இ-மெயில் முகவரியில் இருந்து வந்திருக்கிறது என நுண்ணிப்பாக கவனிக்க வேண்டும். குறிப்பாக தற்போது பல பெரிய நிறுவனங்களின் பெயர்களைப் பயன்படுத்தி gmail.com, yahoo உள்ளிட்டு ஏதேனும் வேலை வாய்ப்பிற்கான தகவல் வந்தால் 95சதவிகிதம் அது போலியானது தான்.

எது உண்மையான அறிவிப்பு? பெரும்பாலான நிறுவனங்கள் இ-மெயில், யாஹூ போன்ற மெயில் சேவைகளிலிருந்து வேலை வாய்ப்பிற்கான தகவலை அனுப்புவதில்லை. மாறாக அந்தந்த நிறுவனங்களின் பெயரில் முடியும் டொமைன் மூலமாகத் தான் இ-மெயில்கள் அனுப்பப்படுகிறது.

உண்மையான வேலை வாய்ப்பு இமெயில் ABCD என்னும் நிறுவனம் மூலம் மின்னஞ்சல் வருகிறது என்றால் அது [email protected], [email protected] போன்று வரும். இதற்கு மாறாக [email protected], [email protected] போன்று வந்தால் அவை அனைத்தும் போலியான இமெயில் முகவரிகள் ஆகும். இதுபோன்ற முகவரியில் இருந்து உங்களுக்கு வேலைக்கான மின்னஞ்சல் வந்தால் அதனை நிராகரித்து விடவும்.

ஆசையைத் தூண்டும் மின்னஞ்சல்கள் ஆன்லைனில் வேலை தேடுவோரை குறிவைக்கும் இதுபோன்ற மோசடிக் கும்பல் பெரும்பாலும் ஆசையைத் தூண்டிவிடுவதில் கவனமாக இருக்கும். கண்களைக் கவரும் வகையிலான வண்ண எழுத்துக்கள், சம்பளத்தை பெரிய எழுத்தாக காட்டுவது போன்றெல்லாம் வந்தால் அது நிச்சயம் போலியான ஒன்றுதான்.

பணம் கொடுத்து ஏமாறாதிர்கள் ஆன்லைனிலோ, நேரடியாகவோ எப்படி வேலை தேடினாலும் அந்நிறுவனத்தில் பணியாற்றுவதற்காகப் பணத்தை கட்டி ஏமாறாதீர்கள். குறிப்பாக, அன்லைனில் வேலை தேடுவோரைக் குறிவைக்கும் இதுபோன்ற மோசடி கும்பல், பணி நியமன ஆணை வழங்குவதற்காக பணம் கேட்டு ஏமாற்றும். ஆனால் உண்மையான நிறுவனங்கள் ஒருபோதும் இது போன்று பணம் கேட்பதில்லை என மறவாதீர்கள்.

நன்றி – tamil.careerindia.com
%d bloggers like this: