பொருட்கள் வாங்க

ஊரடங்கு அறிவிப்பை தொடர்ந்து பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்.

390

ஊரடங்கு அறிவிப்பை தொடர்ந்து பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்.

முழு ஊரடங்கு அறிவிப்பினை தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கடைகளில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர்.

காய்கறிகள் வாங்க குவிந்தனர்

தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் மீண்டும் அதிகரித்த நிலையில் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் கடைபிடிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தமிழக அரசு அறிவித்த கொரோனாவுக்கான புதிய கட்டுப்பாடுகளின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் மதியம் 12 மணி வரை மளிகை, பலசரக்கு மற்றும் காய்கறி கடைகள், மீன், இறைச்சி கடைகளை தவிர, இதர கடைகள் திறக்கப்படாமல் இருந்தது. ஓட்டல்கள், டீக்கடைகளில் பார்சல் சேவை மட்டும் அனுமதிப்பட்டது. அம்மா உணவகம் வழக்கம்போல் செயல்பட்டது.

அத்தியாவசிய தேவைகளான மருந்து கடைகள், பால் வினியோக கடைகள், மருத்துவமனைகள் இயங்கின. பெட்ரோல்-டீசல் விற்பனை நிலையங்கள் செயல்பட்டன. கடந்த ஞாயிற்றுக்கிழமை போல், இந்த ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு கடைபிடிக்கலாம் என்று பொதுமக்கள் நேற்று மளிகை பொருட்கள், காய்கறி வாங்க குவிந்தனர்.

முழு ஊரடங்கினால் கடைகளில் கூட்டம்

இந்த நிலையில் நேற்று காலை தமிழக அரசு திடீரென்று நாளை (திங்கட்கிழமை) முதல் வருகிற 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்தது. மேலும் முழு ஊரடங்கிற்கு முன்னதாக 2 நாட்களுக்கு மட்டும் அனைத்து கடைகளையும் இரவு 9 மணி வரை திறந்து வியாபாரம் செய்யவும், 24 மணி நேரமும் அரசு மற்றும் தனியார் பஸ்களை இயக்கவும், சலூன் கடைகளை திறக்கவும் உத்தரவிட்டது.

இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் மூடப்பட்டிருந்த அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு வியாபாரம் நடந்தது. இதனால் அந்த கடைகளில் பொருட்கள் வாங்க பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. சலூன் கடைகள் திறக்கப்பட்டது. ரம்ஜான் பண்டிகை நெருங்குவதால் நகைக்கடை, ஜவுளிக்கடை, வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

பஸ்களில்…

அரசு மற்றும் தனியார் பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மீன், இறைச்சி கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் மும்முரமாக நடந்தது. காலை 8 மணிக்கு திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளில் மாலை 6 வரை விற்பனை படுஜோராக நடந்தது. முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் நாளை முதல் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், மளிகை, பலசரக்கு மற்றும் காய்கறி கடைகள், மீன், இறைச்சி கடைகள் தவிர, இதர கடைகள் திறக்கப்படாது என்பதால், அந்த கடைகளிலும், டாஸ்மாக் கடைகளிலும், முடி திருத்தும் கடைகளிலும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கூட்டம் அலைமோதும். மேலும் இன்றும் பஸ்களில் கூட்டம் அதிகமாக காணப்படும்.

தினத்தந்தி

Facebook
%d bloggers like this: