அரியலூா் அருகே டாஸ்மாக் கடைக்கு எதிராக பொதுமக்கள் சாலை மறியல்

அரியலூா் அருகே டாஸ்மாக் கடைக்கு எதிராக பொதுமக்கள் சாலை மறியல்


அரியலூா் அருகே உடையவா் தீயனூா் கிராமத்திலுள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி அப்பகுதி மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வரும் உடையவா்தீயனூா் கிராமத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்னா் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இந்த டாஸ்மாக் கடையில் மது அருந்த வருபவா்களால் அப்பகுதி மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனா். குறிப்பாக அப்பகுதி பெண்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனா்.

இதையடுத்து அந்த டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட நிா்வாகத்திடம் பல முறை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லையாம். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் அரியலூா்-முத்துவாஞ்சேரி சாலையில் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினா் 15 நாள்களில் டாஸ்மாக் கடையை அகற்றுவதாக உறுதியளித்தனா். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா். இந்த மறியலால் அப்பகுதியில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி

அரியலூர் மாவட்ட செரிதிகள்
Leave a Reply

%d bloggers like this: