உங்கள் பைக்கை புலி துரத்தினா எப்படி இருக்கும்? கேரளாவில் அப்படி ஒரு சம்பவம்.

உங்கள் பைக்கை புலி துரத்தினா எப்படி இருக்கும்? கேரளாவில் அப்படி ஒரு சம்பவம்.


கேரளாவில் இருக்கும் வனவிலங்குச் சரணாலயத்தில் பைக்கில் சென்ற வனத்துறையினரை புலி துரத்திச் சென்ற வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

முத்தங்கா வனவிலங்கு சரணாலயத்தில் மோட்டார் பைக்கில் வனத்துறை அதிகாரிகள் இருவர் ரோந்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போதுதான் இந்த மயிர் கூச்செரியும் சம்பவம் நடந்துள்ளது. இந்த வீடியோ வெறும் 8 நொடி தான். பார்க்கும் போது நமக்கே பயமாக இருக்கிறது.  இந்த முத்தங்கா வனவிலங்கு சரணாலயத்தில் நடந்து இந்த சம்பவத்தை மோட்டர் பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த வனவிலங்கு அதிகாரி தனது செல்ஃபோனில் வீடியோ எடுத்திருக்கிறார். இவ்வீடியோவை அரசு சாரா வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பு ஒன்று தமது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்த வீடியோ சமூக தளங்களில் அதிகமாக பார்க்கப்பட்டும், பகிரப்பட்டும் வருகிறது.

முத்தங்கா வனவிலங்கு சரணாலயம் கேரள மாநிலம் வயநாடு பகுதியில் உள்ளது.

 
Leave a Reply

%d bloggers like this: