புதிய செய்தி :

பேஸ்புக்கில் ‘ஃபேக் நியூஸ்’

பேஸ்புக்கில் ‘ஃபேக் நியூஸ்’ எனப்படும் போலி செய்திகள் எவ்வளவு பெரிய விபரீதங்களை ஏற்படுத்துமென்பதை நாம் நன்றாக அறிவோம். ஒரு உண்மையை நூறு பேர் பொய் என்று கூறினால் அது பொய் ஆவதும், ஒரு பொய்யை உண்மையென்று ஒருத்தன் பேஸ்புக்கில் கூறினாலும் கூட அது உண்மையாவதும் இக்காலத்தில் தான்.

அப்படியானதொரு பொய், உண்மையான சம்பவம் கடந்த 2 தினங்களாக பேஸ்புக்கில் அரங்கேறி வருகிறது. அதாவது, பெரும்பாலான பேஸ்புக் அக்கவுண்ட்கள் ஹேக் செய்யப்பட்டு விட்டதாகவும், உங்கள் தனிப்பட்ட விவரங்கள் பாதுகாப்பில்லாத நிலைப்பாட்டில் உள்ளதாகவும் வெளியான தகவலையடுத்து – பிஎப்எப் (BFF) எனும் புரளி கிளம்பியது.

கடந்த இரு தினங்களாக பேஸ்புக் கமெண்ட் செக்ஷனில் பிஎப்எப் என்ற மூன்று எழுத்தை (ஆங்காங்கே) பெருமளவில் காணப்பட்டது. என்னடா இது புதுசா இருக்கே என்ற வியப்பில் விசாரித்து பார்த்ததில் ஒரே சிரிப்பா போச்சு!

பேஸ்புக் ஹேக் சம்பவத்தை தொடர்ந்து, நிறுவனத்தின் சிஇஓ ஆன மார்க் சூக்கர்பெர்க், பிஎப்எப் எனும் வார்த்தையை உருவாக்கியுள்ளதாகவும், அந்த குறிப்பிட்ட வார்த்தையை பேஸ்புக் கமெண்ட் செக்ஷனில் பதிவிடுவதின் மூலம் உங்களின் பேஸ்புக் ஹேக் செய்யப்பட்டுள்ளதா.? இல்லையா.? என்பதை கண்டறிய முடியுமென்றும் ஒரு பேஸ்புக் போஸ்ட் வெளியானது.

இதுவொரு பூதாகரமான வதந்தியாக உருவாகி, பிரபலமான பேஸ்புக் பக்கங்களின் வழியாக பரவ ஆரம்பித்தது. கமெண்ட் பிரிவில் டைப் செய்யப்படும் “பிஎப்எப்” (BFF) எனும் வார்த்தை பச்சை நிறமாக மாறுகிறதா.? அல்லது கருப்பு நிறமாக மாறுகிறதா என்பதை காண பல்லாயிரக்கணக்கான பேஸ்புக் பயனர்கள் இதை முயற்சி செய்ய ஆரம்பித்தன, அவர்களில் இந்திய பயனர்களும் அடக்கம்.

பச்சை நிறமாக மாறினால் குறிப்பிட்ட பயணத்தின் அக்கவுண்ட் ஹேக் செய்யப்படவில்லை. மறுபுறம், பிஎப்எப் எனும் வார்த்தை கருப்பு நிறமாக மாறினால், அந்த அக்கவுண்ட்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக அர்த்தம். உண்மையில் பிஎப்எப் என்பதின் விரிவாக்கம் பெஸ்ட் பிரென்ட் பார்எவர் (Best Friend Forever) என்பதாகும். எப்படி வாழ்த்துக்கள் என்பதை கமெண்ட் செக்ஷனில் பதிவிட்டால் குறிப்பிட்ட நிறமாக மாறுமோ அதே போல தான் பிஎப்எப் என்பதை பதிவிட்டால் பச்சை நிறமாக மாறும்.

அப்டேட் செய்யப்படாத பேஸ்புக் பயன்பாட்டில் பிஎப்எப் வழக்கமான கருப்பு நிறத்திலேயே தெரிந்துள்ளதால் இது உண்மையென நம்பப்டுள்ளது. இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான ஒரு விடயமாகும். வேண்டுமானால் விளையாட்டிற்கு முயற்சி செய்து பாருங்கள் அல்லது உங்களின் பேஸ்புக் பயன்பாடு அப்டேட் ஆகிவிட்டதா என்பதை கண்டறியும் நோக்கில் முயற்சி செய்து பாருங்கள். ஆனால், ஹேக்கிங் செய்யப்ட்டுள்ளதா என்கிற எண்ணத்தின் கீழ் பிஎப்எப் நுட்பத்தை கையாள வேண்டாம்.

பேஸ்புக் தனியுரிமை கொள்கைகளில் உள்ள ஓட்டைகளையும், பேஸ்புக் வழியாக நடக்கும் முறைகேடுகளையும் மூன்று எழுத்துக்களால் மட்டுமல்ல, பேஸ்புக் நிறுவனத்தால் கூட காப்பாற்ற முடியாதென்பது வெளிப்படை (கேம்பிரிஜ் அனாலிட்டிக்கா) மற்றும் நிதர்சனம்.

 

SOURCE: கிஸ்பாட்Leave a Reply