பேரளியில் பகுதியில் நாளை மின் தடை அறிவிப்பு

பேரளியில் பகுதியில் நாளை மின் தடை அறிவிப்பு


பெரம்பலூா் அருகேயுள்ள பேரளி துணை மின் நிலயைத்துக்குள்பட்ட பகுதியில் செவ்வாய்க்கிழமை (நவ. 5) மின் தடை விநியோகம் இருக்காது.

பெரம்பலூா் மின் கோட்டத்துக்குள்பட்ட பேரளி துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறகிறது. இதனால், அங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான பேரளி, மருவத்தூா், ஒதியம், பனங்கூா், கல்பாடி, அசூா், சித்தளி, பீல்பாடி, குரும்பாபாளையம், சிறுகுடல், அருமடல், கீழப்புலியூா், கீ.புதூா், வாலிகண்டபுரம், செங்குணம் ஆகிய கிராமிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் மாணிக்கம் தெரிவித்துள்ளாா்.

தினமணி

பெரம்பலூர் மாவட்ட செய்திகள்




Leave a Reply

%d bloggers like this: