பேங்கிலிருந்து கால் பண்றோம்னா நம்பாதீங்க: சார்ஜா போலீஸ் அறிவிப்பு

பேங்கிலிருந்து கால் பண்றோம்னா நம்பாதீங்க: சார்ஜா போலீஸ் அறிவிப்பு


சமீப காலமாக நம்மிடமிருக்கும் எடிஎம் பின் நம்பர் மற்றும் ஒடிபி நம்பர் என்னும் ஒன் டைம் பாஸ்வேர்ட் சொல்லுங்கள் ஏகப்பட்ட கால் வரும். அப்படி வரும் எந்த அழைப்பிற்கோ அல்லது குறுஞ்செய்திகளுக்கோ பதில் தரவேண்டாம். அப்படி யாரேனும் அழைத்தாலோ அல்லது மெசேஜ் அனுப்பினாலோ உடனடியாக புகார் தெரிவிக்க ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்ஜா காவல்துறை அறிவித்துள்ளது.

வங்கியின் ஊழியர்கள் போல்  வங்கி கார்டுகள் வைத்திருப்பவர்களிடம்  உங்களுடைய அக்கவுண்ட்டை புதுப்பிக்க வேண்டும். ஆகையால் உங்களுடை வங்கி கணக்கு எண் என்ன? என்று ஆரம்பித்து பெயர் மற்றும் விபரங்களைக் கேட்பதோடு பின் நம்பர் மற்றும் ஒன்டைம் பாஸ்வேர்டையும் கேட்டு வாங்கிக் கொள்கின்றனர். பிறகு அந்த வங்கி கணக்கிலிருக்கும் தொகையை எடுத்துக் கொள்கின்றனர். இது போல் எந்த பேங்கிலிருந்தும் எந்த பேங்க் ஊழியரும் உங்களுடைய பின் நம்பர் ஒன்டைம் பாஸ்வேர்ட் கேட்கவே மாட்டார்கள்.

யாரேனும் போனிலோ, டெக்ஸ்ட் மெசேஜ் மூலமோ தொடர்பு கொண்டால் சுதாரித்துக் கொண்டு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கவும். அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு சென்று தகவல் கொடுக்கவும் அல்லது 901 ற்கு போன் செய்து பதிவு செய்யும்படி சார்ஜா காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் கீழ்கண்ட வழிமுறைகளில் இந்தப் பிரச்சனைகளை கையாளலாம்.

1. புதிய எண்களிலிருந்து வரும் எந்த அழைப்பையும் கவணமாக கையாளுங்கள்.

2. உங்களுடைய கணக்குகளில் உள்ள தொகை விபரங்களை பாதுகாப்பாக வையுங்கள்.

3. சந்தேகம் படும்படியான எந்த அழைப்போ அல்லது மெஸேஜோ வந்தால் உடனே செக்யுரிட்டி சர்வீஸுக்கு  தகவல் தெரிவியுங்கள்.

4. உங்களுடைய கணக்கிலுள்ள தொகைகளை கண்கானியுங்கள்.

என்று சார்ஜா காவல்துறை தெரிவித்துள்ளதாக அமீரக செய்திகள் அறிவிக்கின்றன.

 

7total visits,2visits today
Leave a Reply

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this: